பெரிய புல்லுமலை புனித செபமாலை மாதா திருத்தல திருவிழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக செங்கலடி பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் தெரிவித்தார்.
பெரிய புல்லுமலை புனித செபமாலை மாதா திருத்தல வருடாந்த திருவிழாவானது சனிக்கிழமை(26)ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக திருவிழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக புனித செபமாலை மாதா திருத்தல பங்குத்தந்தை தெரம்ஸ் ராகல் தகவல்களை பிரதேச செயலாளராகிய என்னிடம் தெரிவித்தார்.
மார்ச் மாதம் 14திகதி வெளியாகிய வர்த்தகமானியில் யாத்திரிகள் சட்டத்தின் பிரகாரம் இத்திருத்தலம் பற்றிய திருவிழா ஏப்பிரல் மாதம் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு யாத்திரை ஊர்வலத்துடன் நிறைவுபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திருத்தலம் திருவிழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இத்திருத்தல திருவிழா ஆரம்பிப்பது பற்றிய திகதி பிரதேச செயலாளரிடம் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்
0 Comments:
Post a Comment