23 Apr 2019

மட்டக்களப்பு மாவட்டம் எங்கும் கடைகள் திறக்கப்படாமல் கறுப்பு வெள்ளைக் கொடிகள் போடப்பட்டு துக்கத்தினம் அனுஸ்ட்டிப்பு தொடர்கிறது.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் எங்கும் கடைகள் திறக்கப்படாமல் கறுப்பு வெள்ளைக் கொடிகள் போடப்பட்டு துக்கத்தினம் அனுஸ்ட்டிப்பு தொடர்கிறது.
யேசுபிரான் உயிர்த்த நாயிறு தினமாகன கடந்த 21 ஆம் திகதி காலை மட்டக்களப்பு மத்திய வீதியில் அமைந்துள்ள சியோன் தேவாலயத்தில் எதிர்பாராத விதமாக இடம்பெற்ற தற்கொலைத் தாக்குhலைக் கண்டித்து செவ்வாய்கிழமை (23) வரை மாவட்டத்திலுள்ள வர்த்தக நிலையங்கள் எதுவும் திறக்கப்படாமல், கறுப்பு வெள்ளை கொடிகள் தொங்கவிடப்பட்டு துக்கதினம் அனுஸ்ட்டிக்கப்பட்டு வருகின்றன.

மாவட்டத்திலுள்ள பொது அமைப்புக்கள் உயிரிழந்த உறவுகளுக்காக வேண்டி கண்ணீரஞ்சலி பதாகைகளையும், தொங்கவிட்டுள்ளனர்.

இந்நிலையில், மாவட்டத்தின் பல இடங்களில் இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர், மற்றும் பொலிசாரும் இணைந்து போக்குவரத்துச் செய்யும் வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டு வருகின்றதையும் அவதானிக்க முடிகின்றது.

இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்துகள் சேவையிலீடுபட்டுவருவதோடு, ஒரு சில தனியார் போரூந்துகள் மாத்திரம் சேவையிலீடுபடுவதையும், அவற்றில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

இந்நிலையில் தொடர்ந்து 2 நாட்டகளாக வர்த்தக நிலையங்கள் திறக்கப்படாமல், உள்ளமையினால் பொது மக்களின் இயல்பு நிலையிலும் சற்றுத் தளம்பல் நிலைய ஏற்பட்டுள்ளதாகவும், மக்கள் தெரிவிக்கின்றனர்.





SHARE

Author: verified_user

0 Comments: