மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தரப் பெண்கள் பாடசாலையில் “போதைப்பொருளுக்கு எதிராகா செயற்படுவோம்” எனும் சத்தியப்பிரமாணம் இடம்பெற்றது.
மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட வின்சன்ட் உயர்தரப் பெண்கள் தேசிய பாடசாலையில் அதிமேதகு ஜனாதிபதியின் தூரநோக்குச் சிந்தனையின் பிரகாரம் “போதைப்பொருள் பாவனைக்கு எதிராக செயற்படுவோம்” எனும் தொனிப்பொருளில் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு கல்லூரியின் முதல்வர் திருமதி.கரன்னியா சுபாஹரன் தலைமையில் புதன்கிழமை (03) காலை கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.
இதன்போது தேசியகொடி ஏற்றப்பட்டு, தேசியகீதம் இசைக்கப்பட்டது. மாணவர்கள், ஆசிரியர்கள் கையைநீட்டி போதைப் பொருளுக்கு எதிராக செயற்படுவோம் என உறுதிமொழி தெரிவித்தனர்.
போதை அரக்கனுக்கு சாட்டையடி கொடுத்து, போதையற்ற நாட்டை கட்டியெழுப்பி நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென்பதுதான் நாட்டினுடைய ஜனாதிபதியின் எண்ணமும், சிந்தனையாகும்.
இதன் பிரகாரம் வின்சன்ட் உயர்தர பெண்கள் பாடசாலையில் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு நடைபெற்றபோது அதிபர்கள், பிரதியதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஒன்றிணைந்து போதைக்கு எதிராகவும், போதைப்பழக்கத்தில் ஈபடுவோரை சீர்செய்து புதியதொரு போதையற்ற சமூதாயத்தை உருவாக்க திடசங்கற்பம் பூணுவோம் என சத்தியப்பிரமானம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதியதிபர்களான பா.குமரகுருபரன், சி.தவராசா, மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
0 Comments:
Post a Comment