23 Apr 2019

பலியானோருக்கு உணர்வுபூர்வ மௌன அஞ்சலி

SHARE
நாட்டின் தலைநகர் உட்பட பல்வேறு இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களில் பலியானோருக்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாக கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை 23.04.2019 துக்கம்   அனுஷ்டிக்கப்பட்டது.
பிரதேச செயலகங்கள்;, வலயக் கல்வி அலுவலகங்கள் உள்ளிட்ட அரச அலுவலகங்களில், இந்த இரங்கலும் ஆத்ம சாந்திக்குமான  மௌன அஞ்சலி செலுத்தப்பட்டன.

தேசிய துக்க தினமான செவ்வாய்கிழமை (23.04.2019) காலை 8.00 மணிமுதல், 8:33 மணிவரையிலான 3 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்படுவதற்கான நேரம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு மூன்று நிமிடநேரம் மௌன அஞ்சலி நிகழ்வு உணர்வு பூர்வமாக இடம்பெற்றிருந்தது.




SHARE

Author: verified_user

0 Comments: