மட்டக்களப்பில் ஞாயிற்றுக்கிழமை (21)காலை 9.00 மணியளவில் மட்டக்களப்பு சீயோன் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தின் பின்னர் தொடர்ந்து மட்டக்களப்பு நகர் உட்பட அனைத்து தேவாலயங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் உள்ள முக்கிய தேவாலயங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் நகரின் பாதுகாப்பு மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையும் பலப்படுத்தப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் உள்ள பொதுவான இடங்களில் இராணுவத்தினர், பொலிசார், விமானப்படையினர், விஷேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பொதுமக்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
உறவினர்கள் தங்கள் குடும்ப அங்கத்தவர்களை தேவாலயத்தில் சென்று தேடிப்பார்த்தும் கண்டு பிடிக்கப்படமுடியாமல் உள்ள உறவுகளைத் தேடியும்,இறந்தவர்களின் உடல்களை இனம் காணுவதற்கும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பொதுமக்கள்,உறவினர்கள் ,இளைஞர்கள் நிரம்பி வழிவதையும் காணக்கூடியதாகவுள்து.
0 Comments:
Post a Comment