கடந்த ஞாயிற்றுக் கிழமை(21) இடம்பெற்ற இக்கொடூரமான சம்பவத்தை முற்றுமுழுதாக இந்த அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டமைனையை அரசாங்கம் வழங்க வேண்டும் என்பதை மதகுரு என்ற ரீதியில் தெரிவித்துக் கொள்கின்றேன்.
என கல்முனை ஸ்ரீ சுபத்திராராமய மகா விகாரையின் விகாராதிபதி ஙை;கைக்குரி ரண்முதுக்கல சங்கரெத்தினதேரர், தெரிவித்துள்ளார். பட்டிருப்புத் தொகுதி தமிழ் இளைஞர் சேனை அமைப்பினரால் கடந்த ஞாயிற்றுக்கிழமை(21) தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் உயிர் நீத்த உறவுகளுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு புதன்கிழமை(24) மாலை களுவாஞ்சிகுடி பேரூந்து தமிப்பிடத்தில் இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
நாங்கள் ஒன்றுமை சமாதானம், சகவாழ்வு போன்றவற்றை எதிர்பார்க்கின்றவர்களாக இருக்கின்றோம். ஆனால் தற்போதைக்கு இந்த நாட்டிலே இடம்பெற்ற கொலைச் சம்பவங்கள் யாருமே எதிர் பார்க்காத வகையில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்க விடையமாகும். இந்த நாட்டிலே நாங்கள் எல்லோரும் இனவேறுபாடுகள், மத வேறுபாடுகள் இல்லாதவர்களாக, ஒற்றுமையாக சமாதானமாக வாழவேண்டும். மொழியாக இருக்கலாம், இனமாக இருக்கலாம் ஆனால் அனைவரும் இந்த நாட்டின் பிரஜைகள் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். சுதந்திரமாக தமது மத்ததைப் பின்பற்றுவதற்கு அனைவருக்கம் இந்த நாட்டிலே சுதந்திரம் இருக்கின்றது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (21) இடம்பெற்ற இக்கொடூரமான சம்பவத்தை முற்றுமுழுதாக இந்த அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டமைனை அரசாங்கம் வழங்க வேண்டும் என்பதை மதகுரு என்ற ரீதியில் தெரிவித்துக் கொள்கின்றேன். எதிர்கால சந்தியினராக இளைஞர்கள் தங்களது கடமைகளை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும். அனைத்து மதத்தவர்களையும், சகோதரர்கள்போல் இளைஞர்கள் கையாளவேண்டும் நாங்கள் அனைவரும் இந்த நாட்டின் பிரஜைகள் என்பதை மறக்க வேண்டாம். நாங்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
இந்த துக்ககரமான நிலையிலே நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் எதிர்பாராத விதமாக இந்த நாடு வீழ்ச்சியடைந்த நாடாக மாறிவிடும். நாங்கள் கடந்த 30 வருடங்களாக எவ்வாறு வாழ்ந்தோம் என்பதை அனைவருக்கும் தெரியும். அனை யாரும் மறக்கமுடியாது. ஆனால் தற்போது அந்த நிலமை மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. சுதந்திரமாக போகமுடியாது, போரூந்துகளில் போவதற்கும் பயமாக இருக்கிறது, இந்நிலமை மாற்றமடையவேண்டும்.
இந்த குண்டுத்தாக்கதலை மேற்கொண்டவர் ஒரு மனச்சாட்சியுடன் மேற்கொள்ளவில்லை. அவர் மனிதாபிமான முறையில் அவர் சிந்தித்திருக்கவில்லை. ஆனால் குண்டுதாரருக்கு எந்தவிதமான மனிதாபிவமானமும் இல்லை. அனைவருக்கம் இரத்தம் ஒரு நிறம்தான். ஏன் நாங்கள் பிரிந்து வாழ வேண்டும், ஏன் நாங்கள் சந்தோசமாக வாழ முடியாது. இதனை அனைவரும் சிந்திக்க வேண்டும் உறவு என்பது அனைவருக்கும் ஒரு பொதுவான விடையம்.
மதத் தலைவர்கள் ஒன்றுகூடி சமாதானமாக இருந்தல் போதாது, மக்களும் இளைஞர்களும் சந்தோசமாக இருக்க வேண்டும். கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றதொரு பாடத்தை எமக்குக் கற்றுக் கொடுத்துள்ளது. எனவே உயிரிழந்தவர்களுக்க அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்வதோடு, இனிமேல் இந்த நாட்டிலே இவ்வாறான அனுபவங்கள் இடம்பெறக்கூடாது. எனவே அனைவரும் ஒன்றுபட வேண்டும். என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment