கொக்கட்டிச்சோலை கடுக்காமுனை முதலைப்பிடித்து பெண்ணொருவர் பலியான சம்பவம் இன்று(05) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த குளத்தில் குளக்கச்சென்ற பெண்ணொருவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கடுக்காமுனைக் கிராமத்தினைச் சேர்ந்த ஏழு பிள்ளைகளின் தாயான இளையதம்பி நல்லம்மா என இனங்காணப்பட்டுள்ளது.
இக்குளத்தில் முதலைப்பிடித்து உயிரிழந்தமை முதல்தடவை இதுவென அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
கடுக்காமுனை, வால்கட்டு, அருள்நேசபுரம், சோதன்கட்டு போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குறித்த குளத்திலே நீண்ட காலமாக குளித்துவருகின்றனர். இன்றையச் இச்சம்பவத்தின் மூலமாக குறித்தபகுதி மக்கள் அச்சமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment