28 Apr 2019

கல்வி நிலையங்களில் சோதனை மாணவர்கள் பெற்றோர் ஆசிரியர்களிடமும் விசாரணை

SHARE
கல்வி நிலையங்களில் சோதனை மாணவர்கள் பெற்றோர் ஆசிரியர்களிடமும் விசாரணை
மார்க்கக் கல்வியையும் பாடசாலைக் கல்வியையும் போதிக்கும் கிழக்கு மாகாணத்திலுள்ள மதரசாக்களில் பொலிஸாரும் படையினரும் இணைந்து சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈஸ்டர் தினத் தாக்குதலின் பின்னர் நாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக வீடு வீடாகவும் நிறுவனங்களாகவும் அமைப்புக்களாகவும் உள்ள அனைத்து இடங்களையும் சோதனை செய்ய வேண்டும் என்ற ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைவாக இந்த சோதனைகள் இடம்பெறுவதாக பாதுகாப்புத் தரப்பினரும் பொலிஸாரும் தெரிவிக்கின்றனர்.

படையினரும் பொலிஸாரும். இணைந்து இந்த வித சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

சில இடங்களில் அமைப்புக்களினால் நிருவகிக்கப்படும் கல்லூரிகளில் கற்கும் மாணவர்கள் விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் உட்பட நிருவாகத்தினரும் தமது நடவடிக்கைகள் பற்றி பொலிஸாருக்கு அறிவித்து தேவையேற்படுமிடத்து பொலிஸாரிடமிருந்து கடிதங்களைப் பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.






SHARE

Author: verified_user

0 Comments: