3 Apr 2019

சூழலுக்கேற்றவாறு மாணவர்கள் தங்களை சுதாகரித்துக் கொண்டு ஆழுமைமிக்கவர்களாக வளர்ச்சி பெறவேண்டும் மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதன்.

SHARE
சூழலுக்கேற்றவாறு மாணவர்கள் தங்களை சுதாகரித்துக் கொண்டு ஆழுமைமிக்கவர்களாக வளர்ச்சி பெறவேண்டும் மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதன்.
சூழலுக்கேற்றவாறு மாணவர்கள் தங்களை சுதாகரித்துக் கொண்டு ஆழுமைமிக்கவர்களாக வளர்ச்சி பெறவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர் சிவம் பாக்கியநாதன் தெரிவித்தார்
சர்வதேச குழந்தைகள் புத்தகநாள் தினத்தையொட்டி கோட்டைமுனை அரசடிப்பிள்ளையார் கனிஷ்ட வித்தியாலய மாணவர்களுக்கு அப்பியாசப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (01) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபையினால் அப்பியாசப் புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

பாடசாலை அதிபர் செல்வநாயகம் சந்திரிகா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்ட சிவம் பாக்கியநாதன் மேலும் தெரிவிக்கையில் சிறுவர்களின் நுண்ணறிவை விருத்தி செய்யும் ஆசிரியர்களின் சேவை பாராட்டுதலுக்குரியது

இலங்கை அரசு கல்வியையும் சுகாதாரத்தையும் இலவசமாக மக்களுக்கு வழங்குகின்றது.

அதற்கு அமைவாக மாநகரசபையும் அதனது ஆளுகைக்குட்பட்ட 20 வட்டாரங்களுக்கும் அச்சபைக்குள்ள வளப்பங்கீடுகளைக்; கொண்டு இத்தகைய பயிற்சிப் புத்தகங்களை வழங்கி வருகின்றது.

இதில் நகரத்தை அண்டிய வட்டாரங்களை விட புறநகர்ப் பிரதேச வட்டாரங்களுக்கே முன்னுரிமை அடிப்படையில் வழங்குகின்றோம்.

மட்டக்களப்பு மாநகரசபை கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்துவதில் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றது.

பாடசாலைகளில் சுகாதார மேம்பாட்டு செயற்பாடுகள், கழிவுகளை முகாமைத்துவம் செய்தல் போன்றவற்றில் மாணவர்களுக்டாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கோடு நாம் வழங்கும் பயிற்சிப் புத்தகங்களின் பின் அட்டையில் சுகாதார மேம்பாட்டு செயல்முறைகளை பதித்துள்ளோம் இது எதிர்காலத்தில் சுகாதார மேம்பாட்டை இலகுபடுத்தும்.

இப்பாடசாலை சுற்றாடலை தூய்மையாக வைத்திருந்தமைக்காக பாடசாலைக்கு சுற்றாடல் அதிகார சபையினால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன இதைப் பேணிப் பாதுகாப்பதற்கு பாடசாலையின் சுற்றாடலில் இருக்கும் அயலவர்கள் உதவி புரிய வேண்டும் என பெற்றோரைக் கேட்டுக் கொள்கின்றேன்” என்றார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி. சரவணபவன், மாநகர சபையின் கல்வி விருத்தி செயற்பாடுகளுக்குப் பொறுப்பான சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். சந்திரகுமார் உட்பட பெற்றோர்;களும் கலந்து கொண்டனர்.





SHARE

Author: verified_user

0 Comments: