கட்சி பேதங்கள், மொழி போதங்கள், பிரதேச வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றுபட வேண்டும். இந்த வேலைத்திட்டத்தை முதன் முதலாக புத்தளத்திலேதான் ஆரம்பித்தோம். இச்செயற்றிட்டத்தின் கீழ் எவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்நெடுக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மிகவும் தெழிவாக விளக்கமளித்தார். இவ்வேலைத்திட்டம் முதலாவதாக புத்தளத்திலும், இரண்டாவதாக மட்டக்களப்பிலும் ஆரம்பித்திருக்கின்ற இவ்வேளையில் அடுத்து திருகோணமலை மாவட்டத்திற்கு விசேடமான ஒரு திட்டமும் என்னிடம் இருக்கின்றது.
என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டுக்காக ஒன்றிணைவோம் எனும் செயற்றிட்டம் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்றது. இதன்போது கலந்து கெணர்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…….
இதவரையில் நமது நாட்டில் இருந்த 6 ஜனாதிபதிகளில் அதிகளவு இந்த மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி நான்தான் நாட்டுக்காக ஒன்றிணைவோம் எனும் வேலைத்திட்டத்தின்கீழ் நாங்கள் நாடு பூராகவும் சென்று வருகின்றோம். நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதற்காகத்தான் நாம் நாட்டுக்காக ஒன்றிணைவோம் எனும் செயற்றிட்டத்தை ஆரம்பித்தோம். அரசியல் கட்சி பேதங்ள், மொழி போதங்கள், பிரதேச வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றுபட வேண்டும். இந்த வேலைத்திட்டத்தை முதன் முதலாக புத்தளத்திலேதான் ஆரம்பித்தோம். இச்செயற்றிட்டத்தின் கீழ் எவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்நெடுக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மிகவும் தெழிவாக விளக்கமளித்தார். இவ்வேலைத்திட்டம் முதலாவதாக புத்தளத்திலும், இரண்டாவதாக மட்டக்களப்பிலும் அரம்பித்திருக்கின்ற இவ்வேளையில் அடுத்து திருகோணமலை மாவ்டத்திற்கு விசேடமான ஒரு திட்டமும் என்னிடம் இருக்கின்றது.
இந்த மாவட்டங்களிலே அபிவிருத்திகளில் பெரும் பிரச்சனைகள் இருக்கின்றன. இந்த மாவட்டங்களிலலே அரசாங்கத்தின் அமைச்சரவையில் உறுப்பினர்கள் எவரும் இல்லை. அதனால் அபிவிருத்தி வேலைகளில் தாமதம் ஏற்படுகின்றது. ஒதுக்கப்படுகின்ற பணம் மீண்டும் திருப்பி அனுப்பப் படுகின்றது. எனவே இவ்வேலைத்திட்டத்தின் கிழ் கடந்த நாட்களில் கிராமங்கள் தோறும் சென்று 842 இற்கு அதிகமான வேலைத்திட்டங்களை மேற்கொள்ளப்படுள்ளன.
மேலும் இச்செயற்றிட்டத்தின் மூலம் போதைப் பொருள் வேலத்திட்டத்தை மேற்கொண்டு வருகின்றோம். இவை சட்டவிரோதமான போதைப் பொருட்களாகும். கோக்கேன், அஜீஸ், மல்யுவானா, போன்ற வகையான போதைப் பொருட்கள் அனைத்தும் கிழக்கிலங்கையினூடாகத்தான் எமது நாட்டுக்குள் வருகின்றன. இராணுவத்தினர், முப்படை உத்தியோகஸ்த்தர்கள், பொலிசார், சுங்கத்திணைக்கள உத்தியோகஸ்த்தர்கள், உள்ளிட்ட பலரும் இவ்விடையத்தில் மிகவும் கவனமாகச் செயற்பட்டு வருகின்றனர். போதைப் பொருள் நாட்டிற்குள் வருவதைத் தடுப்பதற்கு மக்களின் ஒத்துழைப்பு எமக்குத் தேவைப் படுகின்றது. சிறுநீரக நோய்க்காக நாம் பெருமளவு பணத்தை செலவு செய்து வருகின்றோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையில்லாமல் பல இளைஞர் யுவதிகள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு வேலை பெற்றுக் கொடுப்பதற்கு ஒரு வழிகாட்டலாக ஸ்மாட் ஸ்ரீலங்கா மைப்பை நிறுவியுள்ளோம். எமது நாட்டுப் பிள்ளைளைப் பாதுகாப்பதற்காக நாம் எல்லோரும் ஒன்றுபட வேண்டும். போதைப் பொருட் பாவனைகளுக்குள்ளும் பிள்ளைகள் உட்படுகின்றனர். தமிழ் சிங்கள் மக்கள் புத்தாண்டை மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வரும் இநிலையில் முஸ்லிம் மக்களும் அதில் இணைந்து கொள்கின்றார்கள். இந்த தமிழ் சிங்கள புத்தாண்டு நல்ல நேரத்தில் அனைவரும் மரக்கன்றுகளை நட்டுவைக்க வேண்டும்.
நாட்டிலே இக்காலகட்டத்தில் பெரும் வரட்சி நிலவி வருகின்றது, இருந்தபோதிலும், 2018, 2019 கலப்பகுதியில்தான் சரித்திரத்தில் அதிகளவு நெல் விளைச்சலைப் பெற்றிருக்கின்றோம். கடந்த வருடம் இயற்கையின் ஆசீர்வாதத்தால் நல்ல மழை வீழ்ச்சி எமக்கு கிடைத்திருந்தது. அந்த மழை வீழ்ச்சியின் பலனாக மக்கள் அதிகளவு நெல் விளைச்சலைப் பெற்றார்கள்.
வடக்கு கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்காக ஜனாதிபதி செயலணியூடாக பணி செய்து வருகின்றேன். அது இங்குள்ள நாடாளுமன்ற உறு;பினர்களுக்கு நன்கு தெரியும். மாத்திற்கு ஒருமுறை நாங்கள் சத்தித்துக் கதைக்கின்றோம். அதில் வடக்கு கிழக்கிலுள்ள அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும், அதிகாரிகளும், அதில் கலந்து கொள்கின்றார்கள். எதிர்கால்தில் அரசாங்கம் என்ற ரீதியில் எதில்காலத்தில் எங்களால் இயன்ற அனைத்து அபிவிருத்திகளையும் செய்வோம். உல்லாசத்துறை, மீன்பிடித்துறை, உள்ளிட்ட அனைத்து துறைகளையும் நாங்கள் மேம்படுத்தி முன்னேற்ற வேண்டும். என்பதோடு மக்களுக்குத் தேவையான அனைத்து செவைகளையும் நாம் செய்வோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.
இதன்போது மரக்கன்றுகள், மற்றும் காணி உறுதிப்பத்திரங்கள், சுயதொழில் உதவி உபகரணங்கள், பாடசாலைகளுக்கான உதவிகள், என்பன ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் அமைச்சர் கயந்த கருணாதிலக மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எர்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் மற்றும் அரச உயர் அதிகாரிகள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர்கள் இலங்கை தொழில் வழிகாட்டி பயிற்சி நிறுவன பிரதிநிதிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment