20 Apr 2019

மட்.பட்.மாங்காடு சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் குடிநீர் சுத்திகரிப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2019 ஏப்ரல் மாதம் 8 ஆம்; திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரை சனாதிபதி செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய நிகழ்ச்சித் திட்டத்தில் நாட்டிற்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் சிறுநீரக நோய்த்தடுப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சுத்தமான குடிநீருக்கான சுத்திகரிப்பு 
 வசதிகளை (Reverse Osmosis Plantsஏற்படுத்தும் நிகழ்ச்சித் திட்டமானது கடந்த 2019.04.10 ஆம் திகதி முற்பகல் மட்.பட்.மாங்காடு சரஸ்வதியில் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இவ்வித்தியாலய அதிபர் திருமதி.தவமணிதேவி குணசேகரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு சனாதிபதி செயலக உதவிச் செயலாளர் கஐh அதிகாரி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.நகுலேஸ்வரி புள்ளநாயகம், ம.தெ.எ.பற்று உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.சத்தியகௌரி தரணிதரன், வாகரை கடற்படை முகாம் அதிகாரி பி.எம்.சி.தனபால ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கோட்டக் கல்விப் பணிப்பாளர், கிராம சேவை உத்தியோத்தர், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர் சங்கத்தினர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டதுடன் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கிராமப் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு இந்நிகழ்வைச் சிறப்பித்தனர்.

இத்திட்டத்தினூடாக இப்பிரதேச மக்கள் சிறுநீரக நோயிலிருந்து பாதுகாக்கப்படுவது உறுதிப்படுத்தப்படுகின்றது. 

இத்திட்டத்தினை வித்தியாலயத்திற்கு நடைமுறைப்படுத்தியமைக்காக இலங்கை ஐனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு இப்பிரதேச மக்கள் அனைவரும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதில் மனமகிழ்வடைவதாக  கல்விச் சமூகம் தெரிவித்துள்ளது.


























SHARE

Author: verified_user

0 Comments: