23 Apr 2019

நாவலடி கடற்கரையில் ஆண் ஒருவர் சடலம் மீட்பு

SHARE
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி பிரதேச கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் செவ்வாய்க்கிழமை 23.04.2019 மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலடி சுனாமி நினைவு தூபிக்கு அருகாமையில் உள்ள கடற்கரையிலே உருக்குலைந்த நிலையில் இந்த சடலம் மீட்கப்பட்டது.

இச்சடலம் சுமார் 65 வயதுடைய ஆணின் சடலம் எனவும் மீட்கப்பட்ட சடலம் உடற் கூறாய்வுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஓப்படைக்கப்பட்டுள்ளதாகவும்  இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
SHARE

Author: verified_user

0 Comments: