9 Apr 2019

கிழக்கில் இளைஞர்களிடையே இன நல்லுறவை வளர்க்கும் வகையில் நைற்றா விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பித்து வைப்பு

SHARE
கிழக்கில் இளைஞர்களிடையே இன நல்லுறவை வளர்க்கும் வகையில் நைற்றா விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பித்து வைப்பு.
போர் வெறியினால் பிளவுபட்டுள்ள நாட்டின் இன நல்லுறவை உயிர்ப்பூட்டும் வகையில் இளைஞர் யுவதிகளிடையே விளையாட்டுப் போட்டிகளை நடாத்தி வருவதாக தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில்பயிற்சி அதிகார சபையின் தலைவரும் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

நைற்றா நிறுவனத்தின் வரலாற்றில் இன நல்லுறவுக்கான இந்த முயற்சி முதன் முறையாக இடம்பெறுவதாகவும் அவர் கூறினார்.

கிழக்கு மாகாண விளையாட்டு போட்டி நிகழ்வுகள் அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூரில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றன.

இந்நிகழ்வை நைற்றாவின் தலைவர் ஆரம்பித்து வைத்து விளையாட்டின் மூலம் திறமைகளை வலுவூட்டி இன ஐக்கியத்திற்குச் சாமரம் வீசுமாறு அறைகூவல் விடுத்தார்.

நிகழ்வில் நைற்றாவின் பயிலுநர்களான தமிழ் சிங்கள முஸ்லிம் சமூகத்து இளைஞர் யுவதிகள் பங்கேற்றனர்.

நைற்றாவின் நாடு தழுவிய தழுவிய இன ஐக்கியத்திற்கான இளைஞர் யுவதிகள் பங்குபற்றும் இறுதித் தேசிய பெரு நிகழ்வு  எதிர்வரும் ஜுலை மாதம் தலைநகர் கொழும்பில் நடாத்த எற்ற ஒழுங்குகள் செய்யப்படுவதாக தலைவர் நஸீர் அஹமட் மேலும் தெரிவித்தார்.




SHARE

Author: verified_user

0 Comments: