காந்தி பூங்காவில் போதைப்பொருள் அற்ற நாட்டை உருவாக்குவோம் எனும் தொணிப்பொருளில் விழிப்புணர்வு.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் “நாட்டிற்காக ஒன்றினைவோம்” என்ற தேசிய திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு காந்தி பூங்காவில் போதைப்பொருள் அற்ற நாட்டை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் காத்தான்குடி முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டிலும் காத்தான்குடி பொலிஸ் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பில் விழிப்புணர்வு நடவடிக்கை ஒன்று புதன்கிழமை (10) இடம்பெற்றது
காத்தான்குடி பிரதேசத்தில் இருந்து ஊர்வலமாக மட்டக்களப்பு காந்தி பூங்காவை மாலை 3 மணியளவில் அடைந்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது இந்நிகழ்வில் எம்.எம்.ஜி.டயல் தீகஹவத்துர மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.எல்.குமாரசிறி காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி மற்றும் முச்சக்ரவண்டி ஓட்டுனர்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டனர்
0 Comments:
Post a Comment