கரடியனாறு பொலிஸ் பிரிவின் ஈரலக்குளம் காட்டுப் பகுதியில் சட்டவிரோத கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் ஆணொருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் கட்டுத் துப்பாக்கியுடன் காட்டுக்கு வேட்டைக்குச் சென்றவேளையில் அவர் வசமிருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்ததிலேயே இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் முறக்கொட்டான்சேனையைச் சேர்ந்த கணேசமூர்த்தி கருணாகரன் (வயது 25) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவதினமான கடந்த புதன்கிழமை 03.04.2019 மாலை தனது கட்டுத் துப்பாக்கியுடன் காட்டுக்குச் சென்றுள்ளார், அவ்வேளையில் காட்டு மிருகங்களுக்கு இலக்கு வைத்தபோது அவர வசமிருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் அவர் படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்தவரை உறவினர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தபோதும் பயனளிக்காமல் இவர் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment