பட்டிருப்புத் தொகுதி தமிழ் இளைஞர் சேனை அமைப்பினரால் குண்டுத்தாக்குதலில் உயிர் நீத்த உறவுகளுக்கு; 359 சுடர் ஏற்றி அஞ்சலி.
கடந்த உயிர்த்த ஞாயிறு திகத்தன்று இலங்கையில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களால் மரணமடைந்த 359 அப்பாவி மக்களின் ஆத்மா சாந்தி வேண்டி பட்டிருப்புத் தொகுதி தமிழ் இளைஞர் சேனை அமைப்பினரால் களுவாஞ்சிகுடி போரூந்து தரிப்பிடத்தில் 359 ஈகைச் சுடர் ஏற்றி புதன்கிழமை (24) மாலை அஞ்சலி செலுத்தினர்.
இதன்போது கல்முனை விகாராதிபதி சங்கரெத்தினதேரர், களுவாஞ்சிகுடி சிவ ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய பிரதம குரு சண்முக மயூரவதன குருக்கள், ஓந்தாச்சிமடம் சிமர்னா தேவாலயத்தின் அருட்தந்தை சுணில், பொதுமக்கள், மற்றும் பட்டிருப்புத் தொகுதி தமிழ் இளைஞர் சேனை அமைப்பினர், களூவாஞ்சிகுடி பொலிசார், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கலந்து கொண்ட மும்மதத் தலைவர்களும், குண்டுத்தாக்குதலின் போது உயிரிழந்த உறவுகளுக்காக வேண்டி பிராத்தனை செய்ததோடு, மூவரும் இணைந்து பொதுச் சுடரை ஏற்றியதுடன், கலந்து கொண்டே ஏனையோ ஏனைய சுடர்களை ஏற்றி மௌன அஞ்சலியும் செய்தனர்.
0 Comments:
Post a Comment