இந்திய இராணுவம் இலங்கையிலிருந்து வெளியேறவேண்டும் என்ற நோக்கில் உண்ணா நோம்பிருந்து உயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதி அம்மாவின் 31 வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு வெள்ளிக்கிழமை (19) உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.
இதன்போது அன்னாரது மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள சமாதியில் மலரஞ்சலி செலுத்தி, ஈகைச் சுடர் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டன.
இதன்போது பூபதி அம்மாவின் மக்கள், உறவினர்கள், மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
0 Comments:
Post a Comment