நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து வாழைச்சேனை அசெம்பிளி ஒப் கோட் தேவாயலத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) விசேட ஆராதனை பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்றது.
வாழைச்சேனை அசெம்பிளி ஒப் கோட் தேவாயலத்தின் போதகர் ஜி.லக்ஸ்மணகாந்த் தலைமையில் விசேட ஆராதனை மற்றும் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அச்சம் காரணமாக ஆராதனை பூசைகளில் வழமைக்கு மாறாக குறைவாகவே மக்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது உயிர் நீர்த்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும், நாட்டிலுள்ள தலைவர்கள், பாதுகாப்பு படையினர், பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும் பிரார்த்தனைகள் இடம்பெற்றது.
இங்கு இடம்பெற்ற பிரார்த்தனையின் போது கலந்து கொண்ட பலர் அழுது தங்களுடைய பிரார்த்தனையில் ஈடுபட்டதுடன், நாட்டில் இன்னுமொரு அசம்பாவிதம் இடம்பெறாத வண்ணமும் பிராத்தனையில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மறை மாவட்டத்திற்குட்பட்ட பல தேவாலயங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை திருப்பலி பூசை இடம்பெறவில்லை. அத்தோடு நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து ஏற்பட்டுள்ள அச்சம் காரணமாக தேவாலயங்களுக்கு செல்வதை மக்கள் தவிர்த்துள்ளனர்.
வாழைச்சேனை அசெம்பிளி ஒப் கோட் தேவாயலத்தில் முன்பாக பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர். மேலும் வாழைச்சேனை திரேசா தேவாலயத்தில் திருப்பலி பூசைகள் இடம்பெறவில்லை. அங்கு இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment