25 Apr 2019

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதன்கிழமை (24) தமிழ் பகுதிகள் வழமைக்குத் திரும்பியுள்ள அதேவேளை முஸ்லிம் பகுதிகள் தொடர்ந்து கடைகள் திறக்கப்படாமல் கர்த்தால் அனுஸ்ட்டிப்பு.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் புதன்கிழமை (24) பெரும்பாலான தமிழ் பகுதிகள் அனைத்தும் வழமைக்குத் திரும்பியுள்ள அதேவேளை முஸ்லிம் பகுதிகள் தொடர்ந்து புதன்கிழமை (23) வரை கடைகள் திறக்கப்படாமல் கர்த்தால் அனுஸ்ட்டிக்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு மத்திய வீதியில்  அமைந்துள்ள சியோன் தேவாலத்தில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21.04.2019) தற்கொலைக் குண்டுத்தாக்குதல் மேற்கொண்டதையடுத்து மட்டக்களப்பு மாவட்டமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இத்தாக்குதலில் 29 பேர் உயிரிழந்தும், 69 பேர் படுகாயமடைந்திருந்தனர். இத்தாக்குதலுக்கு மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், சிவில் அமைப்புக்ள், பொதுமக்கள் என பலரும் தமது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் தாக்குதல் இடம்பெற்று மறுநாள் திங்கட் கிழமையும், செவ்வாய் கிழமையும், மாவட்டத்திலுள்ள அனைத்துக் வர்த்தக நிலையங்களும், திறக்கப்படாமல், கறுப்பு வெள்ளைக் கொடிகள் போடப்பட்டு, துக்கதினம் அனுஸ்ட்டிக்கப்பட்டு வந்த நிலையில் புதன்கிழமை மாவட்டத்திலுள்ள பெரும்பாலான தமிழ் மக்களின் வர்த்தக நிலையங்கள், மற்றும் சிறு கடைகள் என்பன திறக்கப்பட்டுள்ளன.  எனினும் ஏறாவூர், காத்தான்குடி போன்ற முஸ்லிம் மக்கள் செறிந்துவாழும் பிரதேசங்களில் புதன்கிழமை வரை அவர்களது எதுவித வர்த்தக நிலையங்களும் திறக்கப்படாமல், உள்ளன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும், கிழக்கு மாகாண ஆளுனருக்கும் இடையில் கடந்த திங்கட்கிழமை (22) மட்டக்களப்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் புதன்கிழமை (24) வடக்கிலும், கிழக்கிலும், துக்கதினம் அனுஸ்ட்டிக்குமாறும், வெளிவந்த செய்தியால் நாங்கள் புதன்கிழமை வேறு யாருடனும் இணைந்து துக்கதினம் அனுஸ்ட்டிக்கத் தயாரில்லை, எமது மக்களுக்காக தொடர்ந்து துக்கத்தில்தான் இருக்கின்றோம், இதனால் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இருதினங்களும் கடைகளை மூடியிருந்த நாம், புதன்கிழமை திறந்துள்ளோம் என தமிழ் வர்த்தர்கள் தெரிவித்தனர்.

தமிழ் வர்த்தகர்கள் புதன்கிழமை அவர்களது பகுதிகளில் கடைகளைத் திறந்துள்ள போதிலும், நாம் தமிழ் மக்களின் துயரங்களில் பங்கெடுத்து வருகின்றோம், கிழக்கு மாகாண ஆளுனரின் வேண்டுகோளிற்கிணங்க புதன்கிழமை வரை எமது பிரதேசத்திலுள்ள எந்தவித கடைகளையும் திறக்காமல் வெள்ளைக் கொடிகளைத் தொங்கவிட்டு துயரத்தில் பங்கெடுத்து வருகின்றோம் என காத்தான்குடி வர்த்தக சங்கத்தின் தலைவர் கே.எல்.எம்.பரீத் தெரிவித்தார்.

இச்சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு, திருகோணமலை, வவுனியா, யாழ்ப்பானம், போன்ற தூர இடங்களுக்கான போக்குவரத்துக்களும், உள்ளுர் போக்குவரத்துக்களும், புதன்கிழமை வழமைக்குத் திரும்பியுள்ளதையும், பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அரச அரசசார்பற்ற அறுவலகங்ங்களும், வழமைக்குத் திரும்பியுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.









SHARE

Author: verified_user

0 Comments: