கிழக்கில் “தாகம்” தீர்க்கும் இலண்டன் “நம்பிக்கை ஓளி” மட்டு கோறளைப்பற்றில் 21 குழாய்க்கிணறுகள்.
கிழக்கு மாகாணத்தின் பாதிக்கப்பட்ட, இடம் பெயர்ந்த, யுத்தத்தினால் அங்கவீனம் அடைந்த, மற்றும் மாற்றுத்த திறனாளிகள் போன்றோருக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கி வரும் இலண்டன் நம்பிக்கை ஒளி நிறுவனம் மக்களின் அத்தியவசியத் தேவைகளான குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்த்து வைப்பதில் முன்னிற்கின்றது.
முக்கியமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவில் மட்டும் அறநெறிப் பாடசாலை, முன்பள்ளி உட்பட 21 குடும்பங்களின் குடிதண்ணீர் பிரச்சினையைப் போக்கும் முகமாக குழாய்க்க கிணறுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அப்பிரதேசத்தில் அமைந்துள்ள வாழைச்சேனை, விநாயகபுரம், பேத்தாழை, சுங்காங்கேணி, மருதநகர், கல்மடு, புதுக்குடியிருப்பு, நாசிவன் தீவு, முறாவோடை, கறுவாக்கேணி, ஆஞ்சநேயபுரம், கிண்ணயடி, கருங்காலிச் சோலை போன்ற கிராம மக்களுக்கு இலண்டன் நம்பிக்கை ஓளி நிறுவனத்தினால் குழாய்க்கிணறுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டு “தாகம்” தீர்க்கப்பட்டு உள்ளதாக அவ்வமைத்து தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment