மஹியங்கனையில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் வேனொன்றில் பயணித்த 10 பேர் பலி இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி
பதுளை – மஹியங்கனை பிரதான வீதி பங்குவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளதாக மஹியங்கனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
புதன்கிழமை 17.04.2019 அதிகாலை 1.35 மணியளவில் திருகோணமலையிலிருந்து தியத்தலாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பயணிகள் போக்குவரத்து போரூந்தும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதிலேயே இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
ஒட்டுமொத்தமாக வேனில் பயணித்த 12 பேரில் 10 பேர் உயிரிழந்ததுடன் சாரதி உட்பட மற்றொருவரும் படுகாயமடைந்த நிலையில் மஹியங்கனை வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேன் சாரதி தூக்க கலக்கத்தில் வேன் பயணிக்க வேண்டிய வழித் தடத்தில் இருந்து விலகி எதிர்த் திசை வாகனங்கள் பயணிக்க வேண்டிய வழித் தடத்தில் அதிவேகமாக வேனைச் செலுத்திச் சென்றதாகவே பொலிஸார் முன்னெடுத்த ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விரிவான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment