19 Mar 2019

உறவுகள் தொடர்பில் பதிலை அரசாங்கம் வழங்குவதற்கு சர்வதேசம் அழுத்தங்களை வழங்க வேண்டும் - மட்டக்களப்பில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்.(vedio)

SHARE
உறவுகள் தொடர்பில் பதிலை அரசாங்கம் வழங்குவதற்கு சர்வதேசம் அழுத்தங்களை வழங்க வேண்டும் - மட்டக்களப்பில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்.
தமது உறவுகள் தொடர்பில் சரியான பதிலை அரசாங்கம் வழங்குவதற்கு சர்வதேசம் அழுத்தங்களை வழங்க வேண்டும், என்பதை வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் கர்;தாலும், கவனயீர்ப்பு பேரணியும் போராட்டமும் செவ்வாய்க்கிழமை (19) மட்டக்களப்பில் இடம்பெற்றது. 

மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட இந்த கவன ஈர்ப்பு பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ. யோகேஸ்வரன், ஞா. சிறிநேசன், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சீ.வி. விக்னேஸ்வரன், இலங்கை தமிழரசுக் கட்சி செயலாளருமான கி.துரைராஜசிங்கம், மட்டக்களப்பு தமிழ் இளைஞர்கள் சமூக அமைப்பும் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணி உள்ளிட்ட ஏனைய அமைப்புகளும், பொது அமைப்புக்களும், ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர். 

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள், இளைஞர்கள் பல்வேறு கோரிக்கைகளை தாங்கியதாக பேரணி காந்தி பூங்கா வரையில் சென்றது. 

காந்தி பூங்காவினை பேரணி சென்றடைந்ததும் அங்கு கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

போராட்டங்களை நடாத்தி வரும்போது அது தொடர்பாக கவனம் செலுத்தாத ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் சபையில் தமது பிரச்சினையை உள்ளூர் பொறிமுறையில் தீர்க்கப்போவதாக தெரிவித்திருப்பதானது தமக்கு பெரும் ஏமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் குடும்பசங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தெரிவித்தார். 

தமக்கான நீதியை இந்த அரசாங்கம் வழங்கும் என்ற நம்பிக்கை தங்களிடம் தற்போது சிறிதும் இல்லை எனவும் தமக்கான தீர்வினை சர்வதேசம் தலையீடு செய்வதன் மூலமே பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார். 

பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தமது பிள்ளைகள் வாழ்ந்து வருவதாகவும் தொடர்ச்சியாக இந்த அரசாங்கத்தினால் ஏமாற்றப்பட்டு வருவதாகவும் எவ்வாறாயினும் தமக்கு நீதி கிடைக்கும் வரையில் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது. 

மட்டு.நகரில் உள்ள முஸ்லிம் வர்த்தகர்கள் இன்றைய ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவை தெரிவித்து தங்களது வர்த்தக நிலையங்களை மூடி ஆதரவை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

















SHARE

Author: verified_user

0 Comments: