19 Mar 2019

இறால் பண்ணை அமைப்பதற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட மண்முனை வீதியின் அருகில் அமைந்துள்ள இறால் பண்ணைக்கு முன்னால்  திங்கட்கிழமை (18) அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த இறால் வளர்ப்பு பண்ணையில் இறால் வளர்ப்பினை மேற்கொள்ள வேண்டாம் எனக்கூறியே அப்பிரதேச பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, மக்களது குடிநீரில் அசிட்டை கலந்து ஆட்கொல்லி நோயை உருவாக்காதே, இறால் பண்ணை வேண்டாம், எம்மவரை வாழவிடு திட்டத்தை மாற்று, எமது வளத்தை சீரழிக்காதே, முதலாளித்துவத்தை வளர்க்க ஏழைகளின் தொழிலில் கைவைக்காதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைளையும் கையில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்ட இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன், மண்முனை தென்மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விடையங்களை மக்களிடம் கேட்டறிந்து கொண்டனர்.



SHARE

Author: verified_user

0 Comments: