அட்லீ இயக்கிய ‘மெர்சல்’ படம் ‘மூன்று முகம்’ படத்தின் தழுவல்தான் என்று அடித்து கூறுகிறார் அப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி வைத்திருக்கும் பைவ் ஸ்டார் கதிரேசன்.
இதற்கான இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்று அவரை தயாரிப்பாளர் சங்கத்திற்கு அழைத்து பஞ்சாயத்தும் நடந்தது. ‘இது என் சுய சிந்தனையில் உருவான படம். வேணும்னா சட்டப்படி வாங்க’ என்று எழுந்து போய்விட்டார் அட்லீ.
அப்புறமென்ன? கோர்ட் கதவை தட்டியிருக்கிறார் கதிரேசன். கதை திருட்டு விஷயத்தில் யாரு ‘மெர்சல்’ ஆகப் போறாங்களோ?
0 Comments:
Post a Comment