9 Mar 2019

மட்டக்களப்பு தமிழ் இளைஞர் அமைப்பின் இவ்ஆண்டுக்கான பொதுக் கூட்டம்.

SHARE
(தனா)

மட்டக்களப்பு தமிழ் இளைஞர்  அமைப்பின் இவ்ஆண்டுக்கான பொதுக் கூட்டம்.
மட்டக்களப்பில் கலை, கலாசார,பாரம்பரிய  விழுமியங்களுடன் கூடிய நிகழ்வுகளையும் மேலும் பல சமுக நோக்க செயற்றிட்டங்களையும் திறம்பட செய்து வருகின்ற ஓர் அமைப்பான மட்டக்களப்பு தமிழ் இளைஞர்  அமைப்பின் இவ் ஆண்டுக்கான பொதுக் கூட்டமானது 06.03.2019 அன்று மாலை சின்ன உப்போடை பலநோக்கு மண்டபத்தில்  இடம்பெற்றது.

இறைவணக்கத்துடன் ஆரம்பமான  இப் பொதுக்கூட்டத்தில் மட்டு தமிழ் இளைஞர் அமைப்பின் எதிர்கால செயற்பாடுகளுக்கு  மேலும் வலுச் சேர்க்கும் நோக்கோடு சமூக அமைப்பு ரீதியாக பதிவு செய்ய வேண்டும் என்ற ஏகோபித்த உறுப்பினர்களின் விருப்புடன் வரையப்பட்ட புதிய யாப்பும் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. 

தொடர்ந்து புதிய யாப்பின் பிரகாரம் புதிய நிர்வாக தெரிவும் இடம்பெற்றது. அந்தவகையில் மட்டக்களப்பு தமிழ் இளைஞர் சமூக அமைப்பின் இவ் ஆண்டுக்கான புதிய தலைவராக கருணாநிதி ஜனகன் தெரிவு செய்யப்பட்டார். செயலாளராக நடேஸ் துஷியந்தன், பொருளாளராக செ.ஞானச்செல்வன், உப தலைவராக த.கிருஷ்ணகாந் அத்துடன் உப செயலாளராக பா.சுதன், ஊடக இணைப்பாளராக அ.ஜனாத்தன், மக்கள் தொடர்பாளராக நா. தீபாகரன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக மு.நமசிவாயம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன். 

நிர்வாகம்சார் உறுப்பினர்களாக ம.ஜீவகன், ல.விஜி, து.சிவானந்தன்,சு.சியாம், ம.செந்தூர்வாசன், இ.அன்புராஜ், மற்றும் சி.மேகராஜ் ஆகியோருடன் அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களாக தே.மயூரன், து.மதன், பி.பிரவாகரன், வ.சுரேந்திரன், க.ரொனி ப்ரின்சன் மற்றும் ஆலோசகர்களாக வே.பிரபாகாரன், த.தரனிராஜ் ஆகியோரும் இளைஞர்களால் ஏகமனதாக தேர்வு  செய்யப்பட்டனர்.




SHARE

Author: verified_user

0 Comments: