மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு கோட்டைக்கல்லாறு வாவிக்கரை பூங்காவில் சிறப்பாக நடைபெற்றிருந்தது. திறமையான பெண்ணொன்று அழகான உலகத்தைப் படைக்கின்றாள் என்ற தொனிப்பொருளில் இவ் வருட மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில், பிரதம அதிதியாக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்ஷினி ஸ்ரீகாந் அவர்கள் இந் நிகழ்வை சிறப்பித்திருந்தார்.
0 Comments:
Post a Comment