மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள ஓடையிலிருந்து சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பெரியகல்லாறு கடலம்மன் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள ஓடைப்பகுதியிலிருந்து இந்த சடலம் நேற்று (சனிக்கிழமை) மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் பெரியகல்லாறு 03ஆம் குறிச்சி, சின்னத்துரை வீதியைச் சேர்ந்த க.பொன்னுத்துரை (75 வயது) என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment