1 Mar 2019

வாகா எல்லையை வந்தடைந்தார் அபிநந்தன்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இந்தியர்கள்

SHARE
பாகிஸ்தான் இராணுவத்திடம் சிக்கியிருந்த இந்திய விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வாகா எல்லையை வந்தடைந்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் ராவல்பிண்டியிலிருந்து விமானம் மூலமாக லாகூருக்கு அழைத்துவரப்பட்ட அவர், லாகூரிலிருந்து கார் மூலமாக வாகா எல்லையை வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது இந்தியாவின் குடிவரவு மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் அதன்பின்னர் பாகிஸ்தானிலிருக்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலமாக இந்தியாவுக்கு அழைத்துவரப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அபிநந்தனை அழைத்துச் செல்வதற்காக அவரது தந்தையார் எயார் மார்ஷல் சிம்மக்குட்டி நரசிம்மன், தாயார் சோபா மற்றும் மனைவி மகன் உள்ளிட்ட உறவினர்கள் அபிநந்தனை அழைத்துச் செல்ல வந்துள்ளனர்.
இதேவேளை அபிநந்தனை வரவேற்பதற்காக ஏராளமான இந்தியர்கள் எல்லைப்பகுதியில் குவிந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் மேலும் கூறுகின்றன.




SHARE

Author: verified_user

0 Comments: