கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்கள் நில நிருவாக ரீதியில் பல அசௌகரியங்களை எதிர் கொண்டு வருகின்றார்கள் - த.ம.வி.பு.கட்சியின் பொதுச் செயலாளர் பிரசாந்தன் ஆதங்கம்.
கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்கள் நில நிருவாக ரீதியில் பல அசௌகரியங்களை எதிர் கொண்டு வருகின்றார்கள் - தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
கிழக்கை மீட்போம் எனும் தொணிப்பொருளில், 2018 ஆம் ஆண்டு கம்பெரலிய திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புத் தொகுதியை ஆட்சியாளர்கள் ஏமாற்றுவதனை அனுமதிக்க முடியாது? என்ற துட்டுப் பிரசுரங்களை மக்களுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (10) காலை களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைப் பகுதியில் இடம்பெற்றது. இதன்போது அப்பகுதியிலுள்ள மக்களுக்கு இத்துண்டுப்பிரசுரங்களை வழங்கி வைத்து விட்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள், நகரவபை உறுப்பினர்கள், கட்சியின் ஏனைய உறுப்பினர்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர்…
கடந்த வருடம் ஒதுக்கீடு செய்த கம்பெரலிய வேலைத்திட்டத்திற்கு ஒட்டுமொத்த பட்டிருப்புத் தொகுதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆளும் அரசுக்கு ஆதரவு வழங்குகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்கூட கருத்திலெடுக்காமை வேதனைக்குரியதாக இருக்கின்றது. தொகுதிக்கு 200 மில்லியன் ரூபாவை கடந்த வருடம் அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தபோதும், ஒட்டுமொத்த பட்டிருப்புத் தொகுதிக்கு 25 வேiலாத்திட்டங்களுக்காக 28.5 மில்லியன் ரூபாக்களே ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளன. மிகுதியான 171.5 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் அது ஏனைய தொகுதிகளுக்கும், ஏனைய சமூத்திற்கும் வேதனையைத் தருகின்றது.
யுத்ததினால் பாதிப்புற்று வறுமையில் இருக்கின்ற பட்டிக்களைப்பிரதேசம், போரதீவுப்பறுப் பிரதேசம், மண்முனை தென் எருவில் பற்றுப பிரதேசம், ஆகிய வற்றுக்கு வெறும் 28.5 மில்லியன் மாத்திரம் ஒதுக்கீடு செய்திருப்பதானது, தனித் தமிழ் தொகுதியாக இருக்கின்ற பட்டிருப்புத தொகுதியை உதாசீனம் செய்வதாகத்தான் இருக்கின்றது. இதனை மக்களுக்குத் தெipஜவு படுத்த வேண்டியது பொறுப்பு மிக்க அரசியல் கட்சி என்ற ரீதியில் நாம் இதனை முன்னெடுத்து வருகின்றோம்.
2019 ஆம் ஆண்டும் இந்த கம்பெரலிய திட்டத்தினூடாக பட்டிருப்புத் தொகுதிக்கு 300 மில்லியன் ரூபாவும் ஒமுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சரவைத் தீர்மானம் இருக்கின்றது. ஆனால் அதுவும் தற்போதுவரை அதில் 81 வேலைத்திட்டங்களுக்கு, 61.5 மில்லியன் ரூபாய நிதியே கிடைக்கப் பெற்றுள்ளன. மட்டக்களப்புத் தொகுதிக்கு 141 வேலைகளுக்கு 105.4 மில்லியனும், கல்குடா தொகுதிக்கு 167 வேலைத்திட்டங்களுக்கு 181.1 மில்லியனும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதில் வேடிக்கையான விடையம் என்னவெனில் மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேசத்திற்கு 24 மில்லியனும், போரதீவுப்பற்றுப் பிரதேசத்திற்கு 15.6 மில்லியனும், பட்டிப்பளைப் பிரசேதத்திற்கு, 21.9 மில்லியனுமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ஓட்டமாவடி பிரதேசத்திற்கு 54 மில்லியனும், கோறளைப்பற்று மத்திப்பிரதேசத்திற்கு 56.5 மில்லியனும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
பிரதேச செயலாளர்கள், மற்றும் மாவட்ட செயலாளர் ஊடாகத்தான் இந்த கம்பெரலியத்திட்டங்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். மக்களுடன் கலந்துரையாடாமல் தேர்தலை இலக்காக கொண்டு ஆளும் கட்சிக்கு முட்டுக் கொடுக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் இந்நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. அவர்களும் மக்களுடன் கலந்துரையாடாமல், அவர்களின் ஆதரவாளர்களுக்கும். அவர்களுக்கு வாக்களித்தவர்களுக்கும், அவர்களின் முகவர்களுள் பயன்படுத்தும் செயற்றிட்டங்களுக்குமாக இந்நிதியை பயன்படுத்தி வருகின்றார்கள். உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடியே இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
தொகுதிக்கு 300 மில்லியன் என்று பார்த்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 900 மில்லியன் நிதி கிடைக்க வேண்டும். இது பெரியதொரு நிதி ஒதுக்கிடாகும். இதனை வைத்துக் கொண்டு மக்களுக்கான செயற்பாடுகள் நிறைவேற்றப்படாமல். அரசியலுக்கான திட்டங்களே நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதிலும் பட்டிருப்புத் தொகுதி புறபக்கணிக்கப்படுவதும், இத்தொகுதிக்கு கடந்த வருடம் வரவேண்டிய 171.5 மில்லியன் நிதி கிடைக்காமை வேதனைக்குரியதாகும். இதனை மக்களுக்கு தொடர்ந்து தெழிவு படுத்தி வெளியில் கொண்டு வருவதற்கு நாங்களும் தயாராக இருக்கின்றோம்.
கிழக்கை பொருளாதாரரீதியாக, நிலரீதியாக, கல்விரீதியாக, கலாசாரரீதியாக உள்ளிட்ட அனைத்து ரீதியாகவும் நாம் மீட்க வேண்டியுள்ளது. என்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு 11 ஆசனங்களை வைத்துக் கொண்டு 7 ஆசனங்களை வைத்திருந்த முஸ்லிம் காங்கிரசுக்கு கிழக்கு மாகாண சபையைக் கொடுத்தார்களோ அன்றிலிருந்த ஒட்டுமொத்த தமிழர்கள் பாதிப்பை எதிர் நோக்கிக் கொண்டிருக்கின்றார்கள் என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment