கால்நடைகள் இறப்பும் மறுப்பும் விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை யதார்த்தமாக அணுகப்பட வேண்டும்டிமட்டக்களப்பு மாவட்ட கமநல அமைப்புக்களின் தலைவர் கே. யோகவேள்.
மட்டக்களப்பு மாவட்டத்திலும் அதேபோல் கிழக்கு மாகாணத்தின் இன்னும் சில இடங்களிலும் கால்நடைகள் இறப்பு சம்பந்தமாக ஏற்பட்டுள்ளவிவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை யதார்த்தமாக அணுகப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட கமநல அமைப்புக்களின் தலைவரும் உன்னிச்சைக்குளம் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் முகாமைத்துவக் குழுத் தலைவருமான கே. யோகவேள் கேட்டுள்ளார்.
இதுவிடயமாக செவ்வாய்க்கிழமை 05.03.2019 ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், மட்டக்களப்பு மாவட்டம் உட்பட கிழக்கு மாகாணத்தின் வேறு சில பகுதிகளிலும் கால்நடைகள் இறப்பது சம்பந்தமான விடயம் இப்பொழுது அதிகாரப் போட்டியாக மாறியிருப்பது போல் தெரிகின்றது.
சுகாதாரத்துறையும் கால்நடை உற்பத்தி சுகாதாரத்துறையும் இந்த விடயத்தில் நீயா நானா அதிகாரி என்ற நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வந்து ஏழை விவசாயிகளின் துயர் துடைக்க உதவ வேண்டும்.
களத்தில் கால்நடைகள் இறந்து கொண்டிருப்பது விவசாயிகளின் கண்ணீரை வரவழைத்திருக்கின்ற அதேவேளை இவ்விடயத்தை ஒருங்கிணைந்த ரீதியில் உற்றுப் பார்க்க வேண்டிய அலுவலர்களிடத்தில் அதிகாரப் போட்டியை உருவாக்கியிருக்கின்றது.
சுகாதாரத்துறையும், கால்நடை உற்பத்தி சுகாதாரத்துறையும் மக்களின் அபிவிருத்திக்காகவே உள்ள இரு வேறு துறைகளாகும்.
அதுவல்லாமல் கால்நடைகள் இறந்து அதன் மூலமாக ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரமும் அழிந்து கொண்டிருக்கும்போது இந்த இரு துறைகளும் தூர விலகி நின்று வேடிக்கை பார்த்து நீயா நானா எனும் அதிகாரப் போட்டிக்காக உருவாக்கப்பட்டவை அல்ல.
எனவே, கால்நடைகளுக்கு தொற்று ஏற்பட்டதா, அல்லது கால்நடைகளுக்குப் போதியளவு உணவின்மை, உணவுப் பற்றாக்குறை மேய்ச்சல் தரையின்மை, நிலவிய அசாதாரண காலநிலை ஆகியவற்றால் இறந்துள்ளனவா என்பதை முதலில் அக்கறையோடு அணுகிப் பார்க்க சம்பந்தப்பட்ட தரப்பினர் முயலவேண்டும்.
எதுவாக இருந்தாலும் ஆராய்ந்து காரணத்தைக் கண்டு பிடித்து அவ்விறப்புக்கள் நிகழாமல் தடுப்பதற்குரிய வழிவகைகளுக்கு விழிப்பூட்டுவதே சிறந்ததாகும்.
அலுவல்லாமல் களத்தில் கால்நடைகள் இறந்து கொண்டிருக்கும்போது கண்மூடித்தனமாக எதுவும் நடக்கவில்லை என்று மறுத்து அதிகாரத்தை மட்டும் உரக்கக் கத்துவது பொருத்தமானதல்ல.
ஏழை விவசாயி ஒருவருக்கு ஒரு மாடு இறப்பது அவ்விவசாயிக்கு காலமெல்லாம் கண்ணீரை வரவழைக்கும் நிகழ்வாகும் என்பதை சம்பந்தப்பட்ட தரப்பினர் புரிந்து கொள்ள வேண்டும்.
கிழக்குப் பல்கலைக் கழகத்தில் விலங்கு விஞ:ஞானப் பிரிவும் உள்ளது. இத்தகைய பிரிவுகள் எல்லாம் இருக்க எதுவுமே நடக்கவில்லை என்று முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைப்பது அறிவுடைமையாகாது”இப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டும்.
0 Comments:
Post a Comment