மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்டபட் தேற்றாத்தீவுக் கிராமத்தில் உள்ள வீடொன்றில் கடந்த 04.03.02019 அன்று தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டன. இவ்வாறு கொள்ளையிடப்பட்ட தங்க நகைளையும், கொள்ளைக்கு கும்பலையும் களுவாஞ்சிகுடிப் பொலிசார் மிகவும் சூட்சுமமான முறையில் கொள்ளையிட்டு 4 நாட்களுக்குள் வெள்ளிக்கிழமை (08) பிற்பகல் அவ்வாறு கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளையும், கொள்ளைக் கும்பலையும் கைது செய்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் சனிக்கிழமை (09) காலை தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது….
கடந்த 4 ஆம் திகதி தமது வீட்டிலிருந்த தங்க நகைகள் கழவாடப்பட்டுள்ளதாக தேற்றதத்தீவைச் சேர்ந்த குடும்பஸ்த்தினர் களுவாஞ்சிகுடி பொலிசில் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். கொள்ளையர்கள் பற்றிய எதுவித தடையங்களும், இல்லாத நிலையில், கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கபில ஜெயசேகரவின் வழிகாட்டுதலில், மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நுவன் வெதசிங்கவின் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் நிமால் மெண்டீஸ் ஆகியோரின் ஆலோசனையின் கீழ், களுவாஞ்சிகுடி பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.டி.எம். பாறுக்கின் வழிநடத்தலில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உப்புல் குணவர்த்தன தலைமையிலாக பொலிஸ் குழு இதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.
இதன்போது சந்தேகத்தின் பெயரில் ஒரு பெண் உட்பட 9 பேரைப் பொலிசார் கைது செய்துள்ளனர். இவர்களுள் நகைக்டை உரிமையாளர்களும், அடங்குகின்றனர். அவர்களிடமிருந்து 9 பவுண் தங்க நகைகளும், ஒரு தொகைப் பணம், கைத் தொலைபேசி ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிசார், தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், பாண்டிரப்பு, மருதமுனை, ஏறாவூ, களுவாஞ்சிகுடி, போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர், இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்று எதுவித தடையங்களும் இல்லாத நிலையில் மிகக் குறுகிய காலத்தில் தமது நுட்பமான நடவடிக்கைகளால் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களை கைது செய்ய முடிந்ததாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உப்புல் குணவர்த்தன தெரிவித்தார்.
இக்கொள்ளையர்களை மடிக்கிப் பிடிப்பதற்கு பொலிஸ் சாஜன் (24207) தயானந்த, பொலிஸ் கொஸ்தாம்பிள் (52131) பிரணவன், பொலிஸ் பொஸ்தாம்பிள் (64470) மென்றோ, பொலிஸ் கொஸ்தாம்பிள் (16479) நெவில், பொலிஸ் கொஸ்தாம்பிள் (73652) சிவராசா பொலிஸ் கொஸ்தாம்பிள் (79542) கலூம், பொலிஸ் கொஸ்தாம்பிள் (8034) விக்கினேஸ்வரன், பொலிஸ் கொஸ்தாம்பிள் (89588) ஏக்கநாயக்க, பொலிஸ் கொஸ்தாம்பிள் (54229) ஹேமபால, பொலிஸ் கொஸ்தாம்பிள் (20820) உதார, பொலிஸ் கொஸ்தாம்பிள் (9082) கிரிசாந், பொலிஸ் கொஸ்தாம்பிள் சாரதி (80628) குமண ஆகிய பொலிஸ் குழுவினர் இந்நடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
கடந்த 4 ஆம்திகதி இரவு இக்கொள்ளையர்கள் தேத்தாத்தீவு கிராமதிலுள்ள வீடொன்றிங்குள் கம்பி இல்லாத யன்னல் வழியாக வீட்டுகுள் நுனைந்து குடும்ப பெண்ணின் கேன் வேக்கினுள் இருந்த தங்க நகைகளையும், கைத்தொலைபேசி ஒன்றையும் எடுத்துச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment