10 Mar 2019

கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இளைஞர்களை விளையாட்டில் ஊக்குவிப்பதனால் மதுபாவனை,போதையில் இருந்து அவர்களை விடுவிக்க முடியும்

SHARE
கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இளைஞர்களை விளையாட்டில் ஊக்குவிப்பதனால் மதுபாவனை,போதையில் இருந்து அவர்களை விடுவிக்க முடியும்.இதனால் கிழக்கு மாகாணத்தை போதையில் இருந்து காப்பாற்றி ஜனாதிபதியின் எண்ணத்தை கிழக்கு மக்களும் சீர்செய்து கிழக்கை வலுவான சமூகமாக மாற்றிடலாம் என இதன்போது  கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தை பிரநிதிப்படுத்துவத்தும் விளையாட்டுக்கழகங்கள்,பிரதேச செயலகங்கள்,மாகாணத்தில் விளையாட்டில் திறம்படச்செயற்படும் வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை(9.3.2019) காலை 9.30 மணியளவில் கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர் எம்.நவ்பீஸ் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநர் மேலும் குறிப்பிடுகையில்...
கிழக்கு மாகாணத்தின் விளையாட்டு துறையை முன்னேற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.வெறுமனே மாகாண,மாவட்ட அதிகாரிகளால் மட்டும் அவற்றை செயற்படுத்த முடியாது பிரதேச ரீதியான விளையாட்டு நிகழ்வுகளை நடாத்த பிரதேச விளையாட்டு அதிகாரிகள் முன்னிற்க வேண்டும்.

இவ்வாறான ஒரு நிகழ்வில் கலந்துகொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். குறிப்பாக கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தினால்   இவ்வாறான நிகழ்வு நடாத்தப்படுவதில் மிக்க மகிழ்ச்சி.விளையாட்டு துறையினை மேம்படுத்த நாம் நினைக்கையிலே அவற்றுக்கான பெறுபேறுகள் சிறப்பாக அமையவில்லை. நாட்டில் உள்ள 9  மாகாணங்களில் விளையாட்டு ரீதியாக நாம்  ஒன்பதாவது இடத்தில் இருக்கின்றோம்.2008  ஆம் ஆண்டு நாம் மாகாண மட்டத்திற்கான விளையாட்டிற்கு பொறுப்பான அமைச்சராக இருந்த போது பல விளையாட்டு அதிகாரி இடங்களுக்காக இருந்த வெற்றிடங்களை  நாம் நிரப்பி வேலைவாய்ப்புகளை வழங்கினோம்.

தற்போதும் கிழக்கு மாகாணத்தில் 11  பிரதேச விளையாட்டு அதிகாரிகளுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அவற்றுக்கான பணிப்புரைகளை நான் கடந்த செயலாளர்களுக்கான கூட்டத்தில் வழங்கியிருந்தேன். ஆகவே இந்த 45  பிரதேச பிரிவுகளிலும் காணப்படுகின்ற விளையாட்டு அதிகாரிகளும் தங்கள் பிரதேசங்களில் இருந்து குறைந்தது ஒரு வீர,வீராங்கனையாவது தேசிய மட்டத்தில் செல்வதற்கான செயற்பாடுகளை நீங்கள் செய்ய வேண்டும்.அவ்வீர வீராங்கனைகளை உருவாக்குவதற்கு அக்கறையுடனும், அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டும் அப்போதுதான் எமது கிழக்கு மாகாண விளையாட்டு துறையை நாம் முன்னேற்ற வேண்டும். அதேபோன்று மாகாண விளையாட்டுப்பணிப்பாளர் ஒரு இளைஞராக காணப்படுவது மகிழ்ச்சியை அளிக்கின்றது.

அதேபோன்று இங்கு சில  வீராங்கனைகள் தங்கள் விளையாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதி வாய்ப்பு குறைவாக காணப்படுவதை நான் அறிந்தேன்.குறிப்பாக வவுணதீவிலே இருந்து ஒரு வீராங்கனை தேசிய ரீதியான விளையாட்டு போட்டிகளுக்கு  பங்கேற்பதற்கு  உள்ளார் என்பதை நான் அறிந்தேன். அவர்களுக்கான உதவிகளை எதிர்காலத்தில் வழங்குவதற்காக உள்ளோம். அதேபோன்று  இனிவரும் மாகாண விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் தேசிய விளையாட்டு நிகழ்வுகளிலும் எமது வீர வீராங்கனைகள் பங்களிப்பு செய்ய வேண்டும். அதேபோன்று பிரதேச மாவட்ட விளையாட்டு அதிகாரிகள் இவ்விடயத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். விளையாட்டு வீர,வீராங்கனைகள் விளையாட்டு நடவடிக்கைகளிலே ஈடுபட பொருளாதார தடைகள் காரணமாக இருப்பதை நான் அறிகின்றேன்.அவற்றை எதிர்காலங்களில் நிவர்த்தி செய்வதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்.

விளையாட்டு நடவடிக்கைகளை முன்னேற்றுவதற்கு பிரதேச மட்டத்திலே செயற்படுத்துவது  தொடர்பாக நாம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடினோம். குறிப்பாக போதை,மது பாவனைகளில் இருந்து இளைஞர்களை தடுத்து அவர்களை விளையாட்டு ரீதியாக உற்படுத்தி போதைப்பொருட்களில் இருந்து அவர்களை காப்பாற்றுவது தொடர்பாக நாம் கலந்துரையாடினோம். விளையாட்டு துறையை முன்னேற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.வெறுமனே மாகாண,மாவட்ட அதிகாரிகளால் மட்டும் அவற்றை செயற்படுத்த முடியாது.பிரதேச ரீதியான விளையாட்டு நிகழ்வுகளை நடாத்த பிரதேச விளையாட்டு அதிகாரிகள் முன்னிற்க வேண்டும்.பிரதேச விளையாட்டு அதிகாரி பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்பி கொள்வதன் மூலம் பிரதேச ரீதியான விளையாட்டு நடவடிக்கைகளை அபிவிருத்தி பாதையில் நாம் கொண்டு செல்ல முடியும்.இந்த ஆண்டிலும் நாம் கணிசமான விளையாட்டு பொருட்களை வழங்க முடிவு செய்துள்ளோம் எதிர்வரும் தேசிய விளையாட்டு போட்டிகளில் நாம் கணிசமான தங்க பதக்கங்களை பெற்று கொள்ள முயற்சி செய்து  எமது மாகாணத்தின் அந்தஸ்தினை உயர்த்த நாம் முன்னிற்க வேண்டும் என தெரிவித்தார்.

மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற  3  மில்லியன் பெறுமதியான ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்களை பிரதேச ரீதியாக வழங்கி  வைக்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த வருடத்தில் விளையாட்டு அமைச்சுக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் அடிப்படையிலும் மாகாண விளையாட்டு துறையை முன்னேற்றும் நோக்கிலும் இவ்வுபகரணங்கள் வழங்கப்பட்டது.












SHARE

Author: verified_user

0 Comments: