1 Mar 2019

சர்வதேசத்துக்கு ஏமாற்றத்துடன் முடிந்த அமெரிக்க வடகொரிய அதிபர்களின் வியட்நாம் சந்திப்பு

SHARE

புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு நாட்களாக வியட்நாமின் தலைநகர் ஹனோயில் இடம்பெற்ற வடகொரிய மற்றும் அமெரிக்க அதிபர்களது சந்திப்பு எதிர்பார்த்த பலனைத் தராது சர்வதேசத்துக்கு ஏமாற்றம் தரக் கூடியதாக முடிவடைந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இதற்கு முக்கிய காரணமாகத் தங்கள் மீது அமெரிக்கா பிறப்பித்திருத பொருளாதாரத் தடைகளை விலக்க வடகொரியா முன்வைத்த கோரிக்கையை அமெரிக்கா ஏற்க மறுத்தது என்பது கூறப்படுகின்றது.
ஆனாலும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் இச்சந்திப்பு பற்றித் தெரிவித்த போது, குறித்த சந்திப்பு மிக ஆக்கபூர்வமாக இருந்ததாகவும் அணுவாயுதங்களை அழித்தல் மற்ரும் பொருளாதாரம் ஆகியவை முன்னெடுப்பது தொடர்பான வழிகள் பற்றிப் பேசப் பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் இச்சந்திப்பின் போது எந்த ஒப்பந்தமும் எட்டப் படவில்லை என்பதுடன் இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டறிக்கை வெளியிடவோ கூட இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதல் நாள் சந்திப்பின் போது அமெரிக்கா வடகொரியா இடையே முக்கிய ஒப்பந்தம் எதுவும் கைச்சாத்தாகும் என்று எதிர்பார்க்கப் பட்ட போதும் வடகொரியா முற்றிலும் அணுவாயுதங்களை ஒழிக்கத் தயக்கம் காட்டுவதும், இவ்வாறு ஒழித்தால் மாத்திரமே அதன் மீதான பொருளாதாரத் தடை நீக்கப் படும் என்று அமெரிக்கா பிடிவாதமாக இருப்பதும் போன்ற காரணங்களால் இது நிகழவில்லை என்பது சர்வதேசத்துக்கு ஏமாற்றமாகவே முடிந்துள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: