10 Mar 2019

உலகையே உலுக்கிய கோர விமான விபத்து; 157 பேர் பலியான சோகம்

SHARE
எதியோபியாவில் இருந்து 157 பேருடன் புறப்பட்ட பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் அனைவரும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தகவலை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.,
எதியோபிய தலைநகர் அட்டிஸ் அபாபாவில் இருந்து எதியோபியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737-800 மேக்ஸ் ரக விமானம் இன்று காலை கென்ய தலைநகர் நைரோபிக்குப் புறப்பட்டது. ET 302 என்ற எண் கொண்ட அந்த விமானத்தில் 149 பயணிகளும், 8 விமானப் பணிக்குழுவினரும் இருந்தனர்.
இந்நிலையில் புறப்பட்ட 6 நிமிடங்களுக்குள்ளாகவே அதாவது அந்நாட்டு நேரப்பட்டி காலை 8 மணி 44 நிமிடங்களுக்கு விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. அந்த விமானம் விபத்துக்குள்ளாகி தரையில் விழுந்ததில் விமானத்தில் பயணித்த அனைவரும் (157) பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், எத்தியோபியா பிரதமர் அபிய் அஹ்மத் ((Abiy Ahmed)) விமான விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அந்நாட்டு மக்கள் சார்பிலும், அரசின் சார்பிலும் இரங்கல் தெரிவிப்பதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


SHARE

Author: verified_user

0 Comments: