கொக்கட்டிச்சோலை காவல் பிரிவிற்குட்பட்ட கொல்லநுலை பகுதியில் நேற்று(06) புதன்கிழமை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்போது துப்பாக்கி ரவைகள் பல மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பிரதேசத்தினைச் சேர்ந்தவர்கள் செங்கல் உற்பத்திக்காக கனரக வாகனம் மூலமாக மண்ணை கிளறிய போது மண்ணிற்குள் இருந்து துப்பாக்கி ரவைகள் மேற்கிளம்பிய நிலையில், கொக்கட்டிச்சோலை காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த காவல்துறையினர் இதுதொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், அதனை அகற்றுவதற்கான மேலதிக
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment