நுளம்புவலைகள் பாதுகாப்பதற்கு வழங்கப்பட்டாலும்கூட மக்கள் சூழலை தூய்மையாக வைத்திருப்பதற்கு ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
நுளம்புவலை நுளம்புகளிலிருந்து பாதுகாப்பதற்கு வழங்கப்பட்டாலும்கூட மக்கள் தங்களுடைய சூழலை பாதுகாப்பாக, தூய்மையாக வைத்திருப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். எவரும் டெங்கு நோயால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக டெங்கு நூளம்பு பெருக்கத்தை தடுக்கும் வகையில் எமது பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள் புதன்கிழமை (20) அனைத்து கிராமங்களுக்கும் சென்று மக்களிடம் விழிப்புணர்வுகளை மேற்கொண்டிருந்தனர். எனவே சூழலை சுத்தமாக வைத்திருப்பதற்கு சட்டத்திற்கூடாகத்தான் செயற்படுத்தப்பட வேண்டும் என்பதையும் கடந்து மக்கள் தங்களுடைய மனப்பாங்கை மாற்றி தங்களது சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் தெரிவித்தார்.
அம்கோர் எனும் அரச சார்பற்ற நிறுவனம் மண்முனை தென் எருவில பற்று பிரதேசத்திலுள்ள மக்களுக்கு நுளம்புப் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பான கிணற்று மூடிகள் வழங்கி வைக்கு ஆரம்ப நிகழ்வு களுவாஞ்சிகுடி வடக்கு பொதுக்கட்டடத்தில் வியாழக்கிழமை (21) இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
கிராம சக்தி செயற்பாட்டு வாரமாக இம்மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதி வரையில் இடம்nறுகின்றது. இவ்வாராத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் டெங்கு அற்ற ஒரு சூழ்நிலையை உருவாக்குகின்ற ஒரு தினமும் புதன்கிழமை (20) இடம்பெற்றிருந்தது. இன்று வியாழக்கிழமை (21) போதை ஒழிப்பு தினமாகப் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு சமூகத்தில் இருக்கின்ற முக்கியமான பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த வாரம் பிரகடனப்படுத்தப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக டெங்கு அற்ற சூழலை உருவாக்குவதற்காக அரச தரப்பும், அரச சார்பற்ற அமைப்புக்களும், இணைந்து கைகோர்த்து செயற்பட்டு வருகின்றன. இந்நிலையில் அம்கோர் நிறுவனத்தினால் இப்பிரதேச மக்களுக்கு நுளம்புப் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பான கிணற்று மூடிகள் வழங்கி வைக்கப்படுகின்றன. இப்பொருத்தமான காலத்தில் இச்செயற்பாடு இடம்பெறுவது வரவேற்கத்தக்கதாகும்.
நுளம்புவலை நுளம்புகளிலிருந்து பாதுகாப்பதற்கு வழங்கப்பட்டாலும்கூட மக்கள் தங்களுடைய சூழலை பாதுகாப்பாக, தூய்மையாக வைத்திருப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். எவரும் டெங்கு நோயால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக டெங்கு நூளம்பு பெருக்கத்தை தடுக்கும் வகையில் எமது பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள் புதன்கிழமை (20) அனைத்து கிராமங்களுக்கும் சென்று மக்களிடம் விழிப்புணர்வுகளை மேற்கொண்டிருந்தனர். எனவே சூழலை சுத்தமாக வைத்திருப்பதற்கு சட்டத்திற்கூடாகத்தான் செயற்படுத்தப்பட வேண்டும் என்பதையும் கடந்து மக்கள் தங்களுடைய மனப்பாங்கை மாற்றி தங்களது சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இதன்போது சமூர்த்தி முகாமையாளர் எஸ்.வரதராஜன், பொதுசுகாதார பரிசோதகர்கள், அம்கோர் நிறுவனத்தின் வெளிக்கள உதவியாளர் கு.சகீரன், உள்ளிட்ட பலரும் இமன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது இப்பிரதேசத்திலுள்ள 7396 பேருக்கு இன்;றயத்தினம் இந்த நுளம்புப் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பான கிணற்று மூடிகள் வழங்கி வைக்கப்பட்டதாகவும், இச் செயற்றிட்டம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர்பிரிவுகளிலும் இடம்பெறுவதாகவும், அம்கோர் நிறுவனத்தின் பிரதிநிதி இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment