22 Feb 2019

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து மாணவர்களும், பெற்ரோரும் ஆர்ப்பாட்டம்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து மாணவர்களும், பெற்ரோரும் ஆர்ப்பாட்டம்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை (22) காலை அப்பாடசாலை மாணவர்களும், பெற்ரோரும் பாடசாலை வாயிற்கதவை மூடி தாக்கியவர்களைக் கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் மேலும் தெரியவருவதாவது… 

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா மகாவித்தியாலயத்தின் விளையாட்டுப்போட்டி தற்போது கடந்த ஒரிரு தினங்களாக நடைபெற்று வருகின்றது. அதன் ஒருகட்ட விளையாட்டுப்போட்டி அருகிலுள்ள முனைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை (21) நிகழ்வு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அம்மைதானத்திற்குள் திடீரென் புகுந்த சில குண்டர்கள் அங்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது தாக்கு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தில் முதலைக்குடா மாவித்தியாலயத்தைச் சேர்ந்த 5 மாணவர்கள் பாதிக்கப்பட்டு மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேற்படி பாடசாலை நிருவாகம் தெரிவிக்கின்றது.

இவ்வாறு மாணவர்கள் மீது தமது காட்டு மிராண்டித் தாக்குதலை மேற்கொண்டவர்களை உடன் கைதுசெய்யுமாறு கோரியும், இவ்விடையத்தில் பொலிசார் துரிதமாகச் செயற்பட வேண்டும் எனக்கோரியும், வெள்ளிக்கிமை (22) காலை அப்பாடசாலை மாணவர்களும். பேற்றோரும் இணைந்து பாடசாலையின் வாயிற் கதவை மூடி பதாகைகளை ஏந்திவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாரபட்சமின்றி பாதிக்கப்டப்ட மாணவர்களுக்கு நீதிவழங்கு, மாணவர்களைத் தாக்கியவர்களை உடன் கைது செய், முன்னேறும் வலயம் இது முதுகில் குத்தாதே!, உள்ளிட்ட பல வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு மாணவர்களும், பெற்றோரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டாதில் ஈடுபட்ட இடத்திலிற்கு விரைந்த கொக்கட்டிச்சோலைப் பொலிஸ் நிலையப் பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.ஐ.ஏ.வகாப் தலைமையிலான பொலிஸ்குழுவினர் நிலைமைய ஆராயந்து ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடி பாடசாலை மாணவர்களைத் தாக்கியவர்கைள கைது செய்வதாக உத்தரவாதமளித்துள்ளனர். பின்னர் மாணவர்களும், பெற்றோரும் கலைந்து சென்றனர்.






















SHARE

Author: verified_user

0 Comments: