28 Feb 2019

பாகிஸ்தான் பிரதமரின் அதிரடி; விடுதலையாகிறார் விங் கமாண்டர் அபிநந்தன்!

SHARE
பாகிஸ்தான் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள இந்திய வான்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் நாளையதினம் விடுதலைசெய்யப்படவுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
அமைதியின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதமர் இம்ரான் கான் மேலும் கூறினார்.
எவ்வாறாயினும் பிரதமர் இம்ரான் கான் இவ்வாறு கூறியதையடுத்து பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேசையைத் தட்டி ஆர்ப்பரித்தனர்.
SHARE

Author: verified_user

0 Comments: