25 Feb 2019

மட்டக்களப்பு முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்புரிச் சங்கத்தினர் கிழக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு

SHARE
மட்டக்களப்பு முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்புரிச் சங்கத்தினர் கிழக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு.
மட்டக்களப்பு முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்புரிச் சங்கத்தினர் ஞாயிறன்று 24.02.2019 கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வைச் சந்தித்து தமது பிரச்சினைகளை எடுத்துக் கூறியதாக மட்டக்களப்பு முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் எஸ். ஜேசுதாஸ் தெரிவித்தார்

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட    பகுதியில் தொழில்  ரீதியாக சேவையிலீடுபடுகின்ற முச்சக்கர வண்டி சாரதிகளின் தரிப்பிடம் தொடர்பில் மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் மற்றும்  மாநகர முதல்வர்  ஆகியோருடன்  ஏற்பட்டுள்ள முரண்பாடுகள்  தொடர்பாகவே ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டுவந்ததாகவும் ஜேசுதாஸ் மேலும் தெரிவித்தார்.

தாம் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளைக்  கவனத்தில் கொண்ட ஆளுநர் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி சுமுகமான  தீர்வினை பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்துள்ளதாகவும் ஜேசுதாஸ் கூறினார்.





SHARE

Author: verified_user

0 Comments: