ஜனநாயக மக்கள் முன்னணியின் (புளொட்) மட்டக்களப்பு மாவட்டத்துக்கான தலைமைக் கட்சி அலுவலகம் இன்று யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின்’ தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தனால் திறந்து வைக்கப்பட்டது
கட்சியின் மட்டக்களப்பு மாவட்டப் பொறுப்பாளர் எஸ்.செல்லத்துரை தலைமையில் நடைபெற்ற இக் கட்சி அலுவலகத்திறப்பு விழாவில்,
முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான கே.லிங்கநாதன், கோ.கருணாகரம், ஆர்.துரைரெத்தினம், இ.பிரசன்னா, மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர், பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள். பொது மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான கே.லிங்கநாதன், கோ.கருணாகரம், ஆர்.துரைரெத்தினம், பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் ஆகியோரும் கட்சியின் முன்னாள் உறுப்பினரும் செங்கலடி மத்திய கல்லூரியின் அதிபருமான எஸ்.அருணாசலம் ஆகியோர் உரையாற்றினர்.
நிகழ்வின் இறுதியில் வறிய மாணவர்கள் மூவருடைய பாடசாலைக் கல்விப் போக்குவரத்துக்காக துவிச்சக்கர வண்டிகள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின்’ தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தனால் வழங்கப்பட்டது.
0 Comments:
Post a Comment