27 Feb 2019

படகு கவிழ்ந்ததில் மீனவர் மாயம். தேடுதல் தொடர்கிறது.

SHARE
ஏறாவூர் சவுக்கடி கடலில் படகு கவிழ்ந்ததில் காணாமல் போன மீவரைத் தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெறுவதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவின் தன்னாமுனையில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான நடேசன் மோகனதாஸ் (வயது 32) என்பவரே செவ்வாய்க்கிழமை சவுக்கடி கடலில் கிழந்து போன வலையைத் தைக்கும் வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது படகு கவிழ்ந்ததில் காணாமல் போயிருந்தார்.
வலை தைக்கும் வேலைகளுக்காக இருவர் படகொன்றில் கடலுக்குச் சென்றுள்ளனர். அச்சந்தர்ப்பத்தில் பேரலைகள் காரணமாக படகு கவிழ்ந்துள்ளது.
அச்சந்தர்ப்பத்தில் இருவரும் கரைநோக்கி நீந்தி வந்து கொண்டிருக்கும்போது ஒருவர் கடல் அலைகளால் அள்ளுண்டு செல்லப்பட்டு மூழ்கியுள்ளார்.

கூடவே சென்ற சக மீனவர் ஒருவாறு நீந்திக் கரை சேர்ந்து சக மீனவர்களுக்கும் பொலிஸாருக்கும் உறிவனர்களுக்கும் தகவலைத் தெரிவித்து தேடுதலில் ஈடுபட்டபோதும் இரண்டாவது நாரளாகியும் சடலம் மீ;ட்கப்படவில்லை. 
இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் விசாரணைகிளில் ஈடுபட்டுள்ள அதேவேளை காணாமல் கடலுக்குள் மூழ்கியவரின் சடலத்தைத் தேடும் பணிகள் தொடர்கின்றன.

SHARE

Author: verified_user

0 Comments: