மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் தாய்மொழி தின நிகழ்வு வியாழக்கிழமை (21) நடைபெற்றது.
வித்தியாலயத்தின் அதிபர் சா.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், 195க்கு மேற்பட்ட, தமிழுக்கு தொண்டாற்றிய அறிஞர்களின் உருவப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும் கி.மு 3 ஆம் நூற்றாண்டில் வழக்கில் இருந்த தமிழ் எழுத்துக்களும், தற்போது வழக்கில் உள்ள தமிழ் எழுத்துக்களும் மண்ணிலும், கருங்கல்லிலும், ஓலைச் சுவடிகளிலும் எழுதப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இதன்போது, அரைநூற்றாண்டுகளுக்கு முன்பு படுவான்கரைப் பிரதேசத்தில் வழக்கில் இருந்த சொல்லாடல்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டன. உணவு, தொழில், காவியம், நாட்டார் பாடல், கலை போன்ற துறைகளில் காணப்பட்ட சொல்லாடல்கள் தொடர்பிலே கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இக்கலந்துரையாடலில் அதிகளவான பெண்களும் பங்கெடுத்திருந்தனர். இதன்பேது பற்றியம் சஞ்சிகையின் மூன்றாவது இதழும் வெளியீடு செய்யப்பட்டதுடன், மாணவர்களின் நிகழ்வுகளும் நடைபெற்றன.
இந்நிகழ்வில், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான செ.மகேந்திரகுமார், சோ.சுரநுதன், கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், உதவிக்கல்விப் பணிப்பாளர்களான க.குணசேகரம், ரஞ்சிதமலர் கருணாநிதி, மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன், செயலக கலாசார உத்தியோகத்தர் ந.ருபேசன், ஆசிரிய ஆலோசகர்கள், கோட்ட அதிபர்கள் ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
0 Comments:
Post a Comment