உலகில் பல ஆன்மிக அதிசயங்கள் அறிவியலுக்கு சவால் விடும்வகையில் இன்றுவரை நீடித்து வருகின்றன அந்தவகையில் 13 நூற்றாண்டுகளாக விஷ்ணுவின் கற்சிலை நீரில் மிதக்கும் அதிசயத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.
நேபால் தலைநகர் காட்மாண்டுவில் சிவபுரி மலையின் அருகிலிருக்குகிறது புத்தானிக்கந்தா என்ற விஷ்ணு கோயில். இந்த கோயிலில் பாற்கடலில் ஆதிசேஷனின் மேல் படுத்திருப்பது போலிருக்கும் விஷ்ணு சிலை நீரில் மிதப்பது பெரும் ஆச்சயர்யமாகும்.
16.4 அடி உயரத்திலும் 42.65 அடி நீளத்திளுமான ஒரே கல்லால் செய்யப்பட்ட பிரம்மாண்டமான விஷ்ணுவின் சிலை 1300 ஆண்டுகளாக நீரில் மிதந்தபடி இருப்பது இன்றுவரை அறிவியலால் பதில் சொல்லமுடியாத பேரதிசயமாக திகழ்ந்து வருகிறது.
13 ஆம் நூற்றாண்டில் ஒரு விவசாயியும் அவரது மனைவியும் விவசாய வேலைக்காக மண்ணை தோண்டிக்கொண்டு இருந்த பொழுது நிலத்திலிருந்து ரத்தம் பீரிட்டு வந்ததாகவும் அந்த இடத்தில் அகழ்ந்து பார்த்த பொழுது விஷ்ணுவின் சிலை கண்டெடுக்கப்பட்டதாக இந்த கோயிலை பற்றிய ஒரு கதை கூறப்படுகிறது. 7 ஆம் நூற்றாண்டில் விஷ்ணு குப்தா என்ற மன்னனின் ஆட்சியில் இந்த சிலை நிறுவப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன.
இந்த சிலை எப்பொழுதும் மிதந்தபடியே இருந்தாலும் நாள் தவறாமல் ஆறுகால பூஜையும் நடந்தவண்ணமே இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 11-ஆம் நாளன்று வரும் ஏகாதசியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் நீரில் மிதக்கும் அதிசய விஷ்ணுவை தரிசித்து அருளை பெற்று வருகின்றனர்.
0 Comments:
Post a Comment