2 Jan 2019

எதையாவது சாதிக்க வேண்டும் என்ற மன உறுதியுடன் அறிவுரைகளைப் பணிவுடன் ஏற்றுக் கொண்டதால் இந்தச் சாதனை மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்களின் அனுபவப் பகிர்வு

SHARE
எதையாவது சாதிக்க வேண்டும் என்ற மன உறுதியுடன் அறிவுரைகளைப் பணிவுடன் ஏற்றுக் கொண்டதால் இந்தச் சாதனைமாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்களின் அனுபவப் பகிர்வு
 “எதையாவது சாதிக்க வேண்டும் என்ற மன உறுதியுடன் பெற்றோரினதும் ஆசிரியர்களினதும் அறிவுரைகளைப் பணிவுடன் ஏற்றுக் கொண்டு அதன்படி அர்ப்பணித்துச் செயற்பட்டதால் கல்வியில் இந்த உயர் அடைவு மட்டத்தைப் பெற்றுக் கொண்டதாக” உயர் தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்ட மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

வெளியாகியுள்ள 2018 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில்   மட்டக்களப்பு – ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்கள்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியைச் சேர்ந்த முஹம்மது ஹிதாயதுல்லாஹா பாத்திமா ஸ{க்றா என்ற மாணவி உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் பரீட்சைக்கு தோற்றி மட்டக்களப்பு  மாவட்ட மட்டத்தில் முதலாவது இடத்தினையும் தேசிய ரீதியில்   இடத்தினையும் பெற்றுள்ளார்.

தான் ஒரு பெண் நோயியல் வைத்திய நிபுணராக தேர்ச்சி பெற்று இன மத பேதங்களுக்கப்பால் நாட்டுக்குச் சேவையாற்ற வேண்டும் என்று ஆதங்கப்படுகிறார்.

அதேவேளை, ஏறாவூர் மாக்கான் மாக்கார் தேசியக் கல்லூரி மாணவி முஸம்மில் ஷப்ரினா தொழினுட்பப் பிரிவில் பரீட்சைக்குத் தோற்றி மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் தேசிய மட்டத்தில் 121 வது இடத்தையும் தக்க வைத்துக் கொண்டுள்ளார். கல்விப் புலமையில் மேலும் அடைவைப் பெற்று கல்விச் சேவை புரிய இவர் ஆவலாய் உள்ளார்.

மேலும், ஏறாவூரைச்  சேர்ந்தவரும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி மாணவனுமான முஹம்மது ஹனீபா முஹம்மது பர்ஹாத் கணிதப் பிரிவில் தோற்றி மாவட்டத்தில் முதலிடத்தையும், தேசிய மட்டத்தில் 20 வது இடத்தையும் பெற்று புலமையை வெளிப்படுத்தியுள்ளார். பொறியல் துறையில் புரட்சிகளைச் செய்து சேவையாற்ற இவர் எதிர்பார்த்துள்ளார்.

இதேவேளை மட்டக்களப்பு வின்சென்ற் மகளிர் உயர் தர தேசியப் பாடசாலை மாணவி நவநீதன் கிருஷிகா வணிகப் பிரிவில் தோற்றி மாவட்டத்தில் முதல் நிலையையும் தேசிய மட்டத்தில் 124 வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
வர்த்தக வாணிபத் துறையில் கோலோச்ச வேண்டும் என்று கிருஷிகா தனது எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளார்.

சாதனை படைத்த இந்த மாணவர்களிடம் இனி எதிர்வருகின்ற உயர் தரப் பரீட்சைகளில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு என்ன கூற விரும்புகின்றீர்கள் எனக் கேட்டபோது, விடாமுயற்சியும், அர்ப்பணிப்பும், எதையாவது சாதிக்க வேண்டும் என்ற தூர நோக்கும் இருந்தால் இலக்கை அடையலாம்” என்று இவர்கள் அனைவரும் ஏகமனதாக ஒரே கருத்தையே வலியுறுத்துகின்றனர்.

அத்துடன், “நேரத்தைத் திட்டமிட்டு முகாமைத்துவம் செய்து கொள்வதோடு செயலிலும் தூர நோக்கிலும் கவனம் செலுத்த வேண்டும். பராக்காக நவீன தொடர்பாடல்களில் மூழ்கி வீணாக நேரத்தை பாழாக்கி விடக் கூடாது” என்றும் குறிப்பிடுகின்றனர். 

மேலும், மட்டக்களப்பு வின்சென்ற் மகளிர் தேசிய பாடசாலை மாணவி டிவ்யாணி சுதாகரன்   கலைப் பிரிவு வேறு துறைகளில் தோன்றி  மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.


கலைத்துறைகளை மிளிர வைக்க தான் ஆர்வம் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: