(த.சபிதா)
கல்வி உளவியலின் முக்கிய நோக்கம் உளவியல் எண்ணக்கருக்களையும் ஆய்வு முறைகளையும் கொண்டு கற்றல் கற்பித்தல் பிரச்சனைகளை ஆராய்தாகும். இதன் காரணமாக இவ்வுளவியலின் மையப் பொருள் “கற்றல்” ஆகும். கல்வி உளவியல் திறமையான கற்றலுக்கு தேவையான பொருத்தமான நிலைமைகளை உருவாக்க முற்படுகின்றது.
முறைசார் கற்பித்தலின் முதல் படி ஆசிரியர்களே ஆகும். அந்தவகையில் மாணவர்களின் உளம் பற்றி அறிந்து கொண்டு அதற்கு ஏற்றவண்ணம் கல்வியை வழங்குவதற்கு கற்பித்தலுக்கான உளவியல் பற்றிய அறிவு ஆசிரியருக்கு அவசியமானதாகும். ஆசிரியரது பணி பிள்ளையின் உள செயற்பாட்டுடன் தொடர்புறுகிறது அவர் பெற்றோர் போன்று பிள்ளைகளை காப்பவர். என்ற அர்த்தத்தோடு குறிப்பிடப்படுகின்றார். ஆசிரியர் பாடசாலையில் தந்தையாக அல்லது தாயாகச் செயற்பட நேரிடுவதுண்டு. அப்பொழுதுதான் மாணவர்களின் உளவியல் ரீதியான விடயங்களை ஒரு ஆசிரியர் என்ற வகையில் அறிய முடியும்.
உதாரணமாக ஓர் ஆசிரியர் 40 பேருக்கு தாயாகும் போது முகம் கொடுக்கும் பாரதூரமான சந்தர்ப்பங்களில் பிள்ளைகளில் உளத்தாக்கம் ஏற்படாத விதத்தில் செயற்பட வேண்டும். உளவியல் சாhர்ந்த அறிவு வேறு எந்த ஒரு தொழிலிலும் அவ்வளவு தூரம் செல்வாக்கு பெறுவதில்லை.
ஆசிரியர் தமது கற்பித்தலின் போது சில உளவியல் அறிவுகளை பயன்படுத்த வேண்டியவர்களாக உள்ளார்கள். பிள்ளைகளின் மூலாதர தேவைகள்இ அவர்கள் நடத்தையை பாதிக்கும் பல்வேறு காரணிகள்இ அவர்களின் உடல்இ உளஇ மனவெழுச்சிஇ சமூக விருத்திகளின் இயல்புகள் பற்றியும் எப்படி அவர்கள் கற்கின்றனர்இ எவ்வகையான சூழல்கள் அவர்களின் கற்றலைத் தூண்டக்கூடியன என்பன பற்றியும் ஓர் ஆசிரியர் அறிந்திருக்க வேண்டும்.
அந்தவகையில் பிள்ளையின் மூலாதாரமான தேவை என்று பார்க்கின்ற போது ஒரு பிள்ளைக்கு சிறந்த அறிவுஇ வினைத்திறனான திறன்இ சிறந்த மனப்பாங்கு என்பனவற்றை ஏற்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக ஒவ்வொரு மாணவணினது அறிவுஇ திறன்இ மனப்பாங்கு என்பன வேறுபட்ட தன்மை கொண்டு காணப்படும். அதாவது மணவன் எந்த வழிகளில் அறிவை பெறலாம் என்று அந்த வழிகளை ஆசிரியர்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். சிறந்த முறையில் கற்றலை விளங்கிக் கொண்டு அதற்கான பயனையும் இலக்கையும் அடையும் மனப்பாங்கினை உருவாக்க வேண்டும். இந்தவகையில் கற்பித்தல் உளவியலானது வகுப்பறை ஆசிரியர்களுக்கு அவசியமான ஒன்றாகவே காணப்படுகின்றது. உதாரணமாக தற்காலத்தில் தேடிக்கற்கும் வாய்ப்பினை பல்கலைக்கழகங்களில் ஏற்படுத்தபட்டுள்ளது. இதனால் மாணவனின் அறிவாற்றல் வளர்க்கப்படுகின்றது.
மேலும் அவர்களுடைய நடத்தையை பாதிக்கும் பல்வேறு காரணிகள் காணப்படுகின்றது. அந்தவகையில் அகக்காரணிஇ புறக்காரணி என பிரித்து பார்க்க முடியும். அதற்கு ஆதாரமாக ஒரு மாணவன் இடைவிலகி சென்றுள்ளான் என்றால் அதற்கு குடும்ப சூழல் ஒரு காரணமாகவும் மனதளவில் ஏதோ ஒரு விடயத்தில் பாதிப்புக்கு உட்பட்டு இருந்தால் அம்மாணவனுக்கு ஏற்பட்ட பிரச்சினையை ஆராய்ந்து அவனுக்கு சரியான தீர்வை பெற்றுக்கொடுத்து கற்பதற்குரிய வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். எனவே இவ்வாறான பிரச்சினைகளை இணங்கண்டு அதற்கு சரியான தீர்பினை வழங்குதற்கு ஆசிரியருக்கு கற்றலில் உளவியல் முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது.
கற்பித்தலில் பாட விடயமே முக்கியமென்று கூறுகின்றார்கள். ஒருஆசிரியர் தனது மாணவருக்கு கணித பாடத்தை கற்பிக்கின்றனர் என வைத்துக்கொள்வோம். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் குறித்த மாணவனின் அறிவுஇ திறன்இ மனப்பாங்கு ஆகியவற்றை வளர்ப்பதற்கு கணித பாடத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர். ஆகவே ஆசிரியர் கணித பாடத்தில் சிறந்த தேர்ச்சி உடையவராயிருத்தல் வேண்டும்.
அத்துடன் இப்படத்தின் மூலம் மாணவவிடம் என்னஎன்;ன மாற்றங்கள் எவ்வாறு ஏற்பாடு செய்யலாம் எனவும் அறிந்திருத்தல் வேண்டும். எனவே ஆசிரியருக்கு பாட அறிவும் அத்துடன் கற்பிக்கும் முறைகளும் முக்கியம் என்பது புலனாகின்றது.
அதனையடுத்து மாணவர்கள் உடல் ரீதியான விருத்தியில் மாறுதல்கள் காணப்படுகின்றன. உதாரணமாக வகுப்பறையில் ஒரு சில மாணவர்கள் கண் பார்வை குறைந்தவர்களாக காணப்படுவார்கள். சிலர் கேட்டல் தன்மை குறைந்தவர்களாக காணப்படுர்கள். இவர்கள் தமக்கு இவ்வாறான பிரச்சினை இருக்க என்பதனை ஆசிரியரிடமோ வெளியிடத்திலோ வெளிப்படுத்த வெட்கப்படுவார்கள். எனவே இதனை கவனத்தில் கொண்டு திரையிலோ அல்லது கரும்பலகையிலோ எழுத்துக்களின் அளவை குறிப்பிட்ட அளவில் கோடுதல் வேண்டும். பேசும்போது சத்தமாக பேசுதல் இல்லாவிட்டால் அதற்கான மின்உபகரணத்தை பயன்படுத்தல் வேண்டும். எனவே இவ்வாறு உடல் ரீதியானமாறுதல்களை அறிய ஆசிரியருக்கு உளவியல் அறிவு அவசியமானதாகும்.
மேலும் மாணவர்கள் உளரீதியாகவும் மனப்பாங்கு ரீதியாகவும் மாறுபட்டவர்களாக காணப்படுகின்றார்கள். அந்தவகையில் மாணவர்களை ஊக்குவித்தல் வேண்டும். மாணவரின் கற்றலிலோ வெளிக்கள செயற்பாட்டிலோ ஊக்கலை ஏற்படுத்தினால் ஒரு செயலை ஊக்கத்துடன் தொடங்குவாரானால் அதில் கூடியளவு முன்னேற்றத்தையடைவான். உதாரணமாக பாடசாலையில் ஒவ்வொரு தவனைப்பரீட்சையிலும் முதலாம்இ இரண்டாம்இ மூன்றாம் இடங்களை பெறுபவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்படும். என்று அவர்களுக்கு ஊக்கத்தைக் கொடுத்து அவர்கள் அந்த பரிசை பெறுவதற்கு என்றே ஊக்கத்துடன் கற்பார்கள். எனவே சமூகத்தில் சிறந்த நற்பிரiஐ ஒன்று உருவாக்க ஊக்கல் கற்பித்தல் உளவியலில் முக்கியமுடையதாக காணப்படுகின்றது. ஆகவே கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இது அவசியமான ஒன்றாக அமைகின்றது.
மாணவர் எந்த வேளையைச் செய்தாலும் அதன் இலக்கையும் அதனைச் செய்வதால் என்ன பயன் கிடைக்கும் என்பதனையும் திட்டமாக அறிந்திருத்தல் வேண்டும். வளர்ந்த பிள்ளைகளுக்கு இலக்குகள் சேய்மையில் இருக்கலாம். ஆனால் சிறுவர்களுக்கு அது அவ்வேலை முடிந்தவுடன் அடையக்கூடியதாக கால அண்மையில் இருத்தல் வேண்டும். குறித்த இலக்கை அடைவதற்கு பல படிகள் இருக்குமானால் ஒவ்வொரு படியிலும் வெற்றி பெற்று இறுதி இலக்கை அடையுமாறு கற்றலின் விரைவை மாணவர்கள் கட்டுப்படுத்தவர். அவர்கள் மனம் தளரும் வேளைகளில் ஆசிரியர்கள் போதிய உச்சாகத்தை கொடுக்க வேண்டும். உதாரணமாக சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்றால் உயர் தர பரீட்சைக்கு செல்லலாம். அதில் சித்தி பெற்றால் பல்கலைக்கழக அனுமதியைப் பெறல். இவ்வாறுஆசிரியர் கற்பித்தலில் இலக்கு நோக்கியமனப்பாங்கை உருக்குதனால் எதிர்காலத்தை ஒரு மாணவன் சிறப்பாக அமைத்துக்கொள்ள முடிகின்றது.
ஆசிரியர்களுக்கு கற்பித்தலில் உளவியல் அறிவு தேவைப்பட காரணமாக அமைவது மாணவர்களின் அடைவுமட்டத்தை மதிப்பீடு செய்வதற்காகும். அந்தவகையில் எவற்றைக் கணிக்க எண்ணப்படுகின்றதோ அவற்றையே கணிப்பிடுமாறும் திட்டமிடப்படல் வேண்டும். அத்தோடு திட்டவட்டமான திட்டம் உருவாக்பப்படல் வேண்டும்;. எடுத்துகாட்டாக வகுப்பறையில் கணிப்பீடு நடைபெறுகின்றது என்றால் ஒரு பாடதிதிட்டம் அனைத்தையும் மேவிபரவியதாக வினாக்களும் செயற்பாடுகளும் அமைக்கப்பட்டு மாணவரின் பங்குபற்றலுக்கு இடமளிக்கப்பட்டு முடிவுகளை தெளிவாக பதிவு செய்தல்.
மாணவர் மரவு வழியில் கொண்டுள்ள ஊக்கிகள்இ தேவைகள் ஆகியன காணப்படுகின்றன. உடன் பிறந்த அகவூக்கிகளுடன் சமூகத்தில் கற்கப்படும் சமூகவூக்கிகளையும் ஆசிரியர் கற்பித்தலில் பொதுவாகப் பயன்;படுத்தலாம்; பிறரிடமிருந்து அன்பையும் கணிப்பையும் பெறுதல்இ தீரச் செயல்களில்திறமையைக் காணபித்தல்இ பிறரால் ஏற்றுக்கொள்ளப்படுதல் ஆகிய சமூகவூக்கிகள் மாணவனின் கற்றலை ஊக்குவன. எனவே கற்பித்தலில் உளவியல் அவசியமாதாகும்.
பிள்ளைகளின் மன அழுத்தம்இ மனப்போட்ட பிரச்சினைகளை கண்டறிய ஆசிரியரிடத்து கற்பித்தல் உளவியல் முக்கியமான ஒன்றாகும். அந்தவகையில் கருமங்களில் ஒருவன் பெறும் வெற்றி தோல்விகள் அவனுடைய ஊக்கத்தை பாதிக்கும் மற்றும் அவா நிலையும் இதனோடு தொடர்புபடுகின்றது. உதாரணமாக பரீட்சையில் 100 புள்ளிகள் பெற முயன்ற மாணவன் 95 புள்ளியை பெற்றாலும் அதனை தோல்வியாகவே கருதுவான். ஆனால் 50 புள்ளிகள் பெற முயன்ற மாணவன் 50 புள்ளிகளைப் பெற்றாலே அதனை பெரும் வெற்றியாகவே கருதுவான். இங்கு வெற்றி என்பது வெகுமதி தோல்வி என்பது தண்டனையாகும். இவ்வாறான மனப்போராட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு தோல்வியில் சில மாணவர்கள் துவண்டு விடுகின்றார்கள். இவ்வாறு இல்லாமல் தோல்வியின் அடுத்த படி வெற்றி என மாணவனுக்கு மனத்தையிரியத்தை கொடுத்து மனப்போராட்டத்தில் இருந்து விடுவிக்க கற்றலில் உளவியல் அவசியமானதாகும்.
அத்துடன் முதிர்ச்சியும் கற்றலும் ஒன்றையொன்;று சார்ந்த நிகழ்ச்சிகளாகும். பிள்ளைகள் குறித்த விடயத்தை கற்பதற்கு வேண்டிய உடல்இ உளஇ மனவெழுச்சி முதிர்ச்சிகளைக் கொண்டு அதற்குரிய ஆயத்த நிலையை அடையாத போது அவ்விடயத்தை கற்பிப்பதில் பயனில்லை. எல்லோரும் ஒரே வேகத்தில் முதிர்வடைவதில்லை. என்பதையும் வகுப்பிலுள்ள மாணவர்கள் ஒரே வயதுடையவர்களானாலும் அவர்களிடத்தில் தனியாள் வேறுபாடுகள் உண்டென்பதையும் ஆசிரியர் அறிந்திருத்தல் நன்று. உதாரணமாக சில மாணவர்கள் கலைப்பிரிவையும் சில மாணவர்கள் விஞ்ஞானப்பிரிவையும் நாடிச் செல்கின்றார்கள். இது தனியாள் ஒருவனின் வேறுபாடுகளான கற்றல் உபாயங்கள்இ அணுகுமுறைகள்இ கற்றலுக்கான திறன்கள் என்பனற்றின் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றது. இவ்வாறான தனியாள் வேறுபாடுகளை அறிய ஆசிரியர்களுக்கு கற்பித்தலில் உளவியல் அவசியமானதாகும்.
மாணவனின் முன்னேற்றத்தில் அவர்களின் அவாநிலைகள் முக்கிய இடம்பெறுவதாகவும் அவர்கள் ஏற்படுத்தும் அவாநிலைகள் பல்வேறு காரணிகளில் தங்கியுள்ளதாகவும் ஆய்வுகளில் அறியப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக பொருளாதார வசதி குறைந்த மாணவருக்கு உயர் நிலைப் பள்ளியில் கற்பதற்கு கிடைக்கும் வாய்ப்பே பெரிய வெற்றியாக இருக்கும். ஆனால் பணவசதியுள்ள மாணவருக்கு அது ஒரு பொருட்டாக தோன்றாது. அவர்களுக்குப் பல்கலைக்கழகக் கல்வியே ஓரளவு திருப்தியான குறிக்கோளாகயிருக்கும். இவ்வாறு மாணவனின் பல்வேறு பின்னனிக் காரணிகளைப் பொறுத்தே அவாநிலைகளும் அமையும். ஒவ்வொருவரும் தமது ஆற்றல்இ தகைமைஇ வசதி ஆகியவற்றுக்குக் ஏற்றவாறு அவாநிலைகளை அமைப்பதாலேயே முன்னேற்றமுண்டுஆற்றலுக்கு அப்பாற்பட்ட அவாநிலைகளால் தேல்வியே ஏற்படும். இவற்றை ஆசிரியர் மனதில் வைத்து மாணவர் அவாநிலைகளை ஏற்படுத்துவதில் ஆசி;ரி;யர் வழிகாட்ட வேண்டும் எனவே ஆசிரியருக்கு கற்பி;த்தலில் உளவியல் அவசியமானதாக அமையும்.
தனது மாணவரை ஆசிரியர் புரிந்து கொள்வது அவசியமாகும் மாணவர்ன் திறன்கள்இ அடைகள்இ வீட்டுச்சுழல் ஆகிய தரவுகளை ஆசிரியர் பெற்று அவர்களை புரிந்துகொண்டாலேயே அவர்களின் தராதரத்திற்கு ஏற்றவாறு கற்பிக்க முடியும். ஒவ்வெருவரையும் தனித்தனியே கற்பிப்பது சிரமமெனினும் ஆசிரியர் சில உத்திகளை கையாளலாம். வகுப்பறையில் திறமைக்கேற்ற ஒவ்வொரு பாடத்திற்கும் சிறு சிறு தொகுதிகளை ஆக்கி அவற்றுகேற்ப கற்றற் பணிகளை கொடுக்கலாம் குறைபாடு உடையோரை இனங்கண்டு அவர்களுக்கு ஏற்றவாறு உதவிகளை வழங்க வேண்டும் வீட்டு வேலைகளும் வெளிக்கள வேலைகலும் தனி வேறுபாடுகளுக்கு ஏற்றவாறு கொடுக்கப்பட வேண்டும்.
மேலும் மாணவர்களின் அறிவுஇ திறன்இ மனப்பாங்கு என்பனவற்றை நவீன யுகத்தை கருத்தில் கொண்டு வளர்ப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர் பாடத்திட்ட வரையறையில் இருந்து சற்று வெளியே சென்று மாணவர்களுக்கு மேலதிக அறிவை வழங்க வேண்டும். ஆகவே வகுப்பறை ஆசிரியருக்கு கற்பித்தலில் உளவியல் அவசியமாகும்.
த.சபிதா
கல்வியியல் சிறப்பு கற்கை
கல்வி பிள்ளை நலத்துறை
கிழக்கு பல்கலைக் கழகம்
0 Comments:
Post a Comment