25 Jun 2018

அமைச்சர் சஜித் பிறேமதாஸாவினால் ஏறாவூரில் நவோதய வீடுகளும் நலனோம்புத் திட்டங்களும் கையளிப்பு

SHARE
வீடமைப்பு நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிறேமதாஸாவினால் ஏறாவூரில் நவோதய வீடுகளும் நலனோம்புத் திட்டங்களும் கையளிக்கப்படவுள்ளதாக தேசிய விடுமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் கந்தையா ஜெகநாதன் தெரிவித்தார்.
வியாழக்கிழமை 28.06.2018 காலை 9 மணிக்கு ஏறாவூரில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் “ஸம் ஸம் கிராமம்” மற்றும் “ஸகாத் கிராமம்” ஆகிய இரு மாதிரி எழுச்சிக் கிராமங்களில் 43 புதிய வீடுகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளான நீர்மற்றும் மின்சார வசதி,  உள்ளகப் பாதை வசதி, பிரவேசப் பாதை வசதி ஆகியனவும் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.

மேலும், 43 குடும்பங்களுக்கு வீடுகளுக்கான உரிமைப் பத்திரம், பயனாளிகள் 170 பேருக்கும் மொத்தமாக 85 இலட்சம் ரூபாய் வீடமைப்புக் கடன் மற்றும் உதவி வழங்கல், பயனாளிகள் 70 பேருக்;கு “விசிரி” திட்டத்தின் கீழ்  தலா ஒரு இலட்ச ரூபாய் இலகு கடன்களுக்கான காசோலை வழங்கல், பயனாளிகள் 25 பேருக்;கு “சொந்துருபியச” எனும் திட்டத்தின் கீழ் தலா 2 இலட்ச ரூபாய் வீடமைப்புக் கடன் வழங்கல்,  “சில்பசவிய” எனும் திட்டத்தின் கீழ் கட்டிடத் தொழிலாளி பயிலுநர்கள் 50 பேருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் உதவு தொகை வழங்குதல் மேலும் கண்பார்வைக் குறைபாடுள்ள 258 பேருக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கல். அத்துடன் பயனாளிகள் இருவருக்கு காணி உரிமைப்பத்திரம் வழங்கல் என்பனவும் இடம்பெறவுள்ளன என்று தேசிய வீட்மைப்பு அப்விருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு அலுவலகம் அறிவித்துள்ளது.



SHARE

Author: verified_user

0 Comments: