24 Jun 2018

தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான கால எல்லை நீடிப்பு

SHARE
அடுத்த வருடம் (2019) அரசாங்கப் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அடுத்த வருடம் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொளவதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

தபால் துறை ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இந்த விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அரசாங்கப் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பத் திகதி ஜுலை மாதம் பத்தாம் திகதி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.

ஜூன் மாதம் 30 ஆம் திகதிவரையே தரம் 1 இல் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கான மாதிரி விண்ணப்ப படிவத்தை hவவி:ஃஃறறற.அழந.பழஎ.டம. என்ற கல்வி அமைச்சின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: