வெள்ளியன்று நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தினை ஒத்திவைக்கவேண்டும்!
இன்றேல் நாம் 800 பேரும் விலகவேண்டிநேரிடும்! 4 லட்சருபாவுக்கு நடந்ததென்ன? பட்டிருப்பு வலயக்கிளை இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க பொதுச் செயலருக்கு அவசரக்கடிதம்!
வெள்ளியன்று (22) முறையற்றவிதத்தில் திருமலையில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தினை ஒத்திவைக்க வேண்டும். இன்றேல் நாம் 800 பேரும் விலகவேண்டிநேரிடும்.
இவ்வாறு இலங்கைத்தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பட்டிருப்பு வலயக்கிளை இலங்கைத்தமிழர் ஆசிரியர் சங்கத்தின பொதுச் செயலருக்கு அவசரக்கடித மொன்றை வியாழக்கிழமை (21) அனுப்பிவைத்துள்ளது.
பட்டிருப்பு வலயக்கக்கிளைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை பொதுச்செயலாளருக்கும் தலைவர் உள்ளிட்ட தாய்ச்சங்க உறுப்பினர்களுக்கு கிளை அனுப்பிவைத்துள்ளது.
எமக்கு முன்னாள் பொருளாளரினால் வழங்கப்பட்ட 4 லட்சருபாவுக்கு என்ன நடந்தது எனக்கேட்கும் இக்கிளையின் தலைவர் இ.பிரபாகரன் செயலாளர் சு.கமலேஸ்வரன் ஆகியோர் சங்கத்தின் கணக்கறிக்கை இதுவரை சமர்ப்பிக்கபடவில்லை. 2013 இல் புதிய நிருவாகம் பகிரங்கமாக தெரிவு செய்யபட்டிருந்தும் இதுவரை கணக்கை மாற்றாமல் இருவரே முறையற்ற விதத்தில் நிதியைக்கையாண்டு வந்ததாகவும் அறிகின்றோம் எனவே இதனையும் தெளிவு படுத்த வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
1) பட்டிருப்பு வலயத்தின் புதிய நிருவாக சபைக்கான பொதுக் கூட்டம் 09.07.2018 ஆம் திகதி அனைத்து அங்கத்தவர்களுக்கும் உரிய முறையில் அறிவித்து கூட்டத்தினை கூட்டுவதென்றும் அதுவரைக்கும் 22.06.2018 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பொதுக் கூட்டத்தினை இடைநிறுத்த வேண்டும் எனவும் அல்லாதவிடத்து தாய்ச்சங்க உறுப்பினர்கள் எங்களது கருத்திற்கு மதிப்பளிக்காமல் ஒதுக்கிவைத்துள்ளனர் எனக்கருதி அனைத்து அங்கத்தவர்களும் விலகிக் கொள்வதாககவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2) எமது வலயத்தில் 800 க்கும் மேற்பட்ட அங்கத்தவர்கள் உறுப்புரிமை கொண்டுள்ளனர். பல இலட்சம் ரூபாய் சந்தப்பணமாக அறவிடப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு இதுவரை சங்கத்தின் கணக்கறிக்கைகள் பார்வைக்கு அனுப்பிவைக்கப்பட வில்லை கணக்கறிக்கை அனுப்பிவைக்கப்பட வேண்டும். வங்கி நடவடிக்கைகள் அனைத்தும் யாப்பு விதிப்படி தலைவர் பொதுச் செயலாளர் பொருளாளர் ஆகிய மூவரில் பொருளாளர் உட்பட இருவரின் கையொப்பத்துடன் மேற்கொண்டமையை உறுதிப்படுத்த வேண்டும்.
3) யாப்பு விதிகளுக்கு முரணாக வழங்கப்பட்டுள்ள பதவிகள் அனைத்தும் இரத்து செய்யப்பட வேண்டும். அத்துடன் அதிபர் ஆசிரியர்களைத் தவிர கோட்டக்கல்வி பணிப்பாளராக கடமையாற்றுபவர்கள் பதவியில் இருந்து நீக்கப்படுதல் வேண்டும். காரணம் அவர்கள் ஆசிரியர் நலன்சார்ந்து செயற்பட மாட்டார்கள்.
4) வலயக் பொதுக் கூட்டத்தினைக் கூட்டி புதிய நிருவாக சபை தெரிவுக்கான நடவடிக்கை எடுப்பதற்காக வலயத்தலைவராக இ.பிரபாகரன் செயலாளராக சு.கமலேஸ்வரன் பொருளாளராக க.வரதராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
5) மட்டக்களப்பு முன்னாள் பொருளாளர் சின்னத்தம்பிபோடி அவர்களினால் வழங்கப்பட்ட 4 இலட்சம் ரூபாய் வைப்பிலிடப்பட்ட வங்கி புத்தகத்தில் இருந்து நிருவாக செயலாளர் பணத்தினை கையாடியுள்ளதாக அறிகின்றோம் அதற்கான கணக்கறிக்கை முன்வைக்கப்பட வேண்டும்.
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பட்டிருப்பு வலயக்கிளையின் புதிய நிருவாக சபைத் தெரிவுக்கான கூட்டம் பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் தலைவர் இ.பிரபாகரன் தலைமையில் 17.06.2018 திகதி ஞாயிற்றுக் கிழமை 3.30 மணிக்கு நடைபெற்றது.
இதன்போது தலைவர் சங்கத்தின் தற்கால நிலைப்பாடு தொடர்பாக அனைத்து அங்கத்தவர்களுக்கும் விளக்கமளிப்பதற்கான கட்டாய தேவை உள்ளதால் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு சபையில் கேட்டுக் கொண்டார்.
இதற்கிணங்க சபையானது அதற்கான அங்கிகாரத்தினை வழங்கியிருந்தது. அவர் தனதுரையில் சங்கத்தின் தற்போதைய போக்குகள் தொடர்பில் கருத்துக்களை முன்வைத்தார். இதன் பின்னர் கூட்டத்திற்கு அறிவிப்பு வழங்கிய முறை தவறு என்பதனை சுட்டிக்காட்டி பலதரப்பட்ட கேள்விகளை சபையினர் எழுப்பியிருந்தனர். இதன்போது ஒரு குழப்பகரமான சூழ்நிலை எழுந்தது. இதன் காரணமாக ஏற்கனவே இருந்த நிருவாகத்தினை வைத்து எதிர் வரும் 09.07.2018 ஆம் திகதி உரிய முறைப்படி கூட்;டம் ஒன்றை கூட்டுவதென ஏகமனதாக சபை முடிவெடுத்ததுடன் அக் கூட்டம் கூட்டுவதற்கு முன்னர் தாய்ச்சங்கமானது எம்மால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் சபை கேட்டுக்கொண்டுள்ளதுடன் இதனை தாய்ச் சங்க உறுப்பினர்களுக்கு அனுப்பிவைக்குமாறும் பரிந்துரைத்தனர் அதன் பிரகாரம் இக் கூட்டக்குறிப்பு தங்களின் நடவடிக்கைக்காக அனுப்பிவைக்கப்படுகின்றது.
0 Comments:
Post a Comment