கால்நடைகளுக்கு தேவையான புல் வெட்டும் இயந்திரத்தை கண்டுபிடித்த பண்ணையாளர்.
கால்நடைகளுக்கு தேவையான புல்லை சிறித சிறிதாக வெட்டுவதற்கான இயந்திரத்தை மட்டக்களப்பு மாவட்டம் பழுகாமத்தைச் சேர்ந்த பண்ணையாளரான கேதீஸ்வரன் என்பவர் கண்டுபிடித்துள்ளார்.
இவர் கால்நடைப் பண்ணை ஒன்றை வைத்துள்ளதோடு, வெல்டிங் கடை ஒன்றையும் நடாத்தி வருகின்றார்.
தனது பண்ணையிலுள்ள கால்நடைகளுக்கு புல் வெட்டிக் கொடுப்பதற்காக இயந்திரம் ஒன்றைப் பெறுவதற்காக பல இடங்களிலும் தேடி அலைந்ததாகவும், இறுதியில் அது கிடைக்காத நிலையில் தனது வெல்டிங் கடையில் தனது முயற்சியினால் இந்த இயந்திரத்தை வடிவமைத்து கண்டு பிடித்துள்ளேன்.
எனது இந்த புதிய முயற்சி எனக்கு வெற்றியளித்துள்ளது. மிகவும் சந்தோசமாகவுள்ளது. எதிர்காலத்தில் இன்னும் சில இயந்திரங்களைக் கண்டுபிடிக்கலாம் என நினைக்கின்றேன் என பண்ணையாளரான கேதீஸ்வரன் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment