ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு கடந்த காலத்திலிருந்து இரப்பிரச்சனையை ஆயுதமாக்கி அதனைப் பூதாகரமாக்கி எமது மக்களுக்குரிய நீதியை வழங்குவதற்குப் பின்னடிக்கின்றார்கள்.
பெரும்பான்மை மக்களுக்கு இருக்கின்ற அத்தனை உரிமைகளையும், சலுகைகளையும் எமது தமிழ் மக்களும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக நாடாளுமன்றத்திலே தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலிந்து குரல் கொடுத்துக் கொண்டு வருகின்றது.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தெரிவித்துள்ளார். அவர் மாகாண சபை உறுப்பினராக இருந்த காலத்தில் குருமண்வெளி மீனவர் கூட்டுறவுச் சங்கத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் வீச்சு வலைகள் வழங்கி வைக்கும் நினழ்வு சனிக்கிழமை (12) நண்பகல் குருமண்வெளி பல நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு மீனவர்களுக்கு வலைகளை வழங்கி விட்டு கருத்துத் தெரிவிககையிலே இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…
கடந்த காலத்திலிருந்த மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் எமது மக்களையும், மக்களுக்காகப் போராடியவர்களையும் கொத்துக் கொத்தாக குண்டுகளைப் போட்டு அழித்தும்,வெள்ளைவேன் கடத்தலும் மிகவும் அகோரமாக நடைபெற்றன. அந்த வகையில் அந்த கொடூர ஆட்சியை மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எமது மக்களிடம் வாக்குக் கெட்டிருந்தது. அதன் பின்னர்தான் தற்போது நல்லட்சி என்கின்ற ஆட்சி கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே தற்போதைய அரசாட்சியை அமைத்தத்தில் எமது தமிழ் மக்களுககும் பாரிய பங்கு உண்டு. என்பதை அவர்கள் மறக்கக்கூடாது. அதுபோல் சிறுபான்மை மக்களின் முழு ஆதரவுடன்தான் தற்போதைய ஜனாதிபதியும் சிம்மாசனம் ஏறினார் என்பதையும் சிந்தித்துப் பார்க்கவேண்டிய நேரம் வந்துவிட்டது.
இந்நிலையில் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும், சில தடைகள் இருக்கின்றன. ஆனால் அந்த தடைகளையும் தகர்த்தெறிந்து பிரச்சனைக்குத் தீர்வு காண அவர்கள் முன்வருகின்றார்களில்லை. அது ஒருபுறமிருக்க அன்று ஆட்சியிலிருந்து துரத்தப்பட்ட மஹிந்த ராஜபக்ஸ மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக அப்பாவிகளாகவுள்ள பெரும்பான்மைச் சிங்கள மக்களிடம் சென்று இந்த நல்லாட்சி அரசாங்கம் தமிழர்களுக்கு இந்த நாட்டைப் பிரித்துக் கொடுக்கப் போகின்றது, அதற்குரிய சட்டவரைவு கொண்டு வரப்போகின்றது, என தெரிவித்து வருகின்றார்.
இவ்வாறு அவர்தான் செய்து வருகின்றார் என்று பார்த்தால் இந்த நல்லாட்சியில் இருக்கின்ற சிலர்கூட எமது மக்களின் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு உடன்பாட்டுக்கு வருவதற்குத் தயங்குகின்றார்கள்.
ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு கடந்த காலத்திலிருந்து இரப்பிரச்சனையை ஆயுதமாக்கி அதனைப் பூதாகரமாக்கி எமது மக்களுக்குரிய நீதியை வழங்குவதற்குப் பின்னடிக்கின்றார்கள்.
அண்மையில் ஜனாதிபதி நாடாளுமன்நத்தில் ஆற்றிய உரையில் கூட சிறுபான்மை மக்களுக்கான பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என கூறியிருக்கின்றாரே தவிர அதனை எவ்வாறு எப்போது செய்வோம் என்ற காலவரையறையை கூறுவதற்குத் தயங்கி நின்றுள்ளார். ஜனாதிபதியும் அவரது கட்சியும் எதிர்லகாலத்தில் ஆட்சியமைப்பதற்கு மக்கள் எதிர்ப்புக் காட்டுவார்கள் என நினைத்து சிறுபான்மை மக்களுக்கான பிரச்சனையைத் தீர்ப்பதற்குரிய கால வரையறையைத் தெரிவிக்காமல் விட்டாரோ தெரிவில்லை. இதுதான் தற்போது நடக்கின்ற அரசியல் ஜதார்த்தம்.
அண்மையில் நாடு முழுவதிலிருந்தும் எமது மக்களைக் கொணர்ந்து எமது மாவட்டத்தின் செங்கலடிப்பகுதியில் மே தினத்தை ஜனாதிபதி நடாத்தியிருந்தார். இந்நிலையில் தமிழர்களெல்லாம் ஒற்றுமைப்பட்டு, ஒரே அணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கீழ் செயற்பட்டுக் கொண்டு எமக்கான விடிவுகளைத் தேடி நிற்கின்ற வேளையில் இம்மாவட்டத்திலுள்ள ஒருசிலர் அற்ப, சொற்ப சலுகைகளுக்காக மக்களுக்கு ஒரு சேவைகளையும் செய்யாமல் இருந்து கொண்டு அங்கு சென்று அமைப்பாளர் பதவிகளைப் பெற்றுக் கொண்டு நாங்கள்தான் ஆளும் கட்சியின் அமைப்பாளர்கள் எனவும், நாங்கள்தான் ஆட்சியின் பங்காளிகள் நாங்கள் கேட்பதைத்தான் ஜனாதிபதியும், பிரதமரும் தருவார்கள் என தெரிவித்து அந்த அமைப்பாளர்கள் எமது மக்களுக்குள் பகைமைகளை வளர்த்திருக்கின்றார்களே தவிர அவர்கள் எமது மக்களுக்காக ஒன்றும் செய்யவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment